பேஸ்புக் உருவாக்குனர் மார்க் ஷூக்கர் பேர்க்கின் பேஸ்புக் பக்கம் ஹெக் செய்யப்பட்டதாக இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Sunday, January 30, 2011
ஷூக்கர் பேர்க்கின் பேஸ்புக் பக்கம் ஹெக் செய்யப்பட்டது
Friday, January 28, 2011
டிவிடி ரிப்பிங் செய்ய மூன்று இலவச மென்பொருட்கள்
ஒரு டிவிடியில் (Removable Media) உள்ள திரைப்படத்தையோ, தகவலையோ கணினியின் வன்வட்டு எனப்படும் ஹார்ட் டிஸ்க்குக்கு (Hard disk) காப்பி செய்யும் செயல். பேக்கப் எடுப்பதற்கோ, எடிடிங் (Copy,backup,editing)
செய்வதற்கோ ரிப்பிங் (Ripping) என்பது அவசியமாகிறது. வணிக ரீதியிலான நிறைய ரிப்பிங் மென்பொருட்கள் (Commercial Applications)
இணையத்தில் ஏராளமாக உள்ளன. அதே நேரம் இலவச மென்பொருட்களும் நமக்காக இணையத்தில் கிடைக்கின்றன. டிவிடி ரிப்பிங் பணியை எளிமையாகவும், விரைவாகவும், தரமாகவும் செய்ய உதவும் முத்தான மூன்று மென்பொருட்கள் கீழே
- டிவிடியின் .VOB கோப்புகளை . MP4 MK4, DivX, AVI வடிவங்களுக்கு மாற்றிட இவை உதவுகின்றன.
- கணினி வித்தகர்கள் (Veterans) மட்டுமின்றி, புதிதாக கணிப்பொறியை பயின்ற ஆரம்பநிலை பயனர்களும் இந்த மென்பொருட்களைப் பயன்படுத்தும் வண்ணம் எளிய முகப்பினைக் கொண்டவை.
- நல்ல உயர்தரம், மிகுந்த வேகம் இவையே ரிப்பிங் மென்பொருட்களின் தாரக மந்திரம்.
தரவிறக்கச் சுட்டிகள்
- FreeStar Free DVD Ripper FreeStar Free DVD Ripper is quickest DVD ripper, DVD ripping software to rip DVDs to VCD, SVCD, MPEG-1, MPEG-2, MPEG-4, AVI, DivX, and XviD formats. Back up your favorite DVD movies to various formats and extract soundtracks from DVDs. Easily and quickly in excellent DVD ripping quality
- HandBrake open-source, GPL-licensed, multi platform, multi threaded video trans coder, available for MacOS X, Linux and Windows.
- Freez DVD Ripper DVD ripping tool to rip your favorite DVD movies to popular DivX/Xvid AVI files, H.264 MP4 files, and even iPod MP4 video files with fast DVD ripping speed and excellent quality.
Saturday, January 15, 2011
இலங்கையிலும் Cyber Crime ஆதிக்கம்
பேஸ்புக் சமூக வலைப்பின்னலானது உலகநாடுகளில் அடைந்துவரும் வளர்ச்சியைப்போல இலங்கையிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.
'சந்திக்கு வந்தால் சுற்றத்தாரைச் சந்திக்கலாம்' எனக் கிராமத்து மொழிவழக்கில் சொல்வார்கள். இப்போது அந்தக்காலம் மாறி 'FB' இற்கு வந்தால் கூட்டத்தோடு குதூகலிக்கலாம்' என்றாகிவிட்டது.
'சந்திக்கு வந்தால் சுற்றத்தாரைச் சந்திக்கலாம்' எனக் கிராமத்து மொழிவழக்கில் சொல்வார்கள். இப்போது அந்தக்காலம் மாறி 'FB' இற்கு வந்தால் கூட்டத்தோடு குதூகலிக்கலாம்' என்றாகிவிட்டது.
Labels:
facebook,
ஃபேஸ்புக்,
தொழிநுட்ப செய்தி,
தொழிநுட்பம்,
படித்ததில் பிடித்தது
Monday, January 10, 2011
பேஸ்புக்கானது எதிர்வரும் மார்ச் மாதம் தனது சேவையை நிறுதிக்கொள்ளவுள்ளதாக ஒரு வதந்தி
பேஸ்புக் பாவனையாளரா நீங்கள்? தினசரி அதில் உலாவருபவரா?அவ்வாறாயின் இச்செய்தியை கேள்வியுற்றிருந்தால் ஆடித்தான் போய் இருப்பீர்கள்.

ஆம் கடந்த சில தினங்களாக பேஸ்புக்கானது தனது சேவையை நிறுத்திக்கொள்ளப்போகின்றது என்ற செய்தி வேகமாக பரவிவந்தது.

ஆம் கடந்த சில தினங்களாக பேஸ்புக்கானது தனது சேவையை நிறுத்திக்கொள்ளப்போகின்றது என்ற செய்தி வேகமாக பரவிவந்தது.
பற்களின் இடையே உளவு பார்க்கும் சிறிய இரகசிய கருவியுடன் அமெரிக்க பெண் ஈரானில் கைது
உளவு பார்க்கும் சிறிய இரகசிய கருவி ஒன்றினை பற்களின் இடையே பொருத்தியவாறு ஈரானுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற அமெரிக்க பெண் ஒருவரை அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டின் அரச நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
Thursday, January 6, 2011
2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை
2010 ஆம் ஆண்டிற்கு விடைகொடுக்கும் தருவாயில் இன்றைய எமது செய்தியானது தொழிநுட்ப உலகில் இவ்வருடத்தில் நிகழ்ந்த முக்கிய சில விடயங்களை நினைவுபடுத்தவுள்ளது.
இவற்றில் அதிகமான செய்திகளை நாம் உங்களுக்கு ஏற்கனவே வழங்கியுள்ள போதிலும் அவற்றை மீண்டும் திரும்பிப்பார்ப்போம்.
மொபைல் தொழிநுட்பம் (Mobile Technology)
1) எச்.டி.சி இவோ 4 ஜி
பிரபல எச்.டி.சி நிறுவனம் உலகின் முதலாவது வை-மெக்ஸ் தொழிநுட்பத்துடன் கூடிய இவோ 4 ஜி அதாவது நான்காவது தலைமுறை வலையமைப்பு கையடக்கத்தொலைபேசியினை அறிமுகப்படுத்தியது.
2) அண்ட்ரோயிட் இயக்குதளம்
கூகுளின் அண்ரோயிட் இயக்குதளமானது உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்பிள் கையடக்கத்தொலைபேசிகளின் விற்பனையை முதல் முறையாக அண்ரோயிட் தொலைபேசிகள் முறியடித்தன.
3) அப்பிளின் ஐ-போன் 4 ஜி மற்றும் ஐ-பேட்
அப்பிள் தனது ஐ-போன் வரிசையில் ஐ-போன் 4 ஜி யை அறிமுகப்படுத்தியது. சில நாட்களிலேயே அதன் அண்டனாவில் காணப்பட்ட கோளாறுகள் காரணமாக பெரிதும் விமர்சிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மற்றும் ஐபேட் எனும் சாதனத்தினையும் அறிமுகப்படுத்தியது.
4) கலெக்சி டெப்
கையடக்கத்தொலைபேசி உலகில் இது ஒரு மைல்கல் எனலாம். காரணம் இது ஒரு சிறிய கணனி மற்றும் கைப்பேசியின் இணைப்பாகும். சுமார் 7 அங்குல திரையைக் கொண்டதாகும்.
இவற்றைத்தவிர நொக்கியாவின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட என் 8 (N8), டெல்லின் ஸ்ரைக் (Dell Streak), எல்.ஜியின் ஒப்டிமஸ்(Optimus ), சொனி எரிக்சனின் எக்ஸ்பீரியா(Xperia), விவாஸ்(Vivaz) தொடர் கையடக்கத்தொலைபேசிகள் மோட்டரோல்லாவின் மைல்ஸ்டோன்(Milestone), மைல்ஸ்டோன், ட்ரொயிட்(Droid) பேசிகள் ஆகியன பெரிதும் பேசப்பட்ட வகைகளாகும்.
சமூகவலையமைப்புக்கள் (Social Networking)
1) பேஸ்புக்
பேஸ்புக் தனது 500 மில்லியன் பாவனையாளர் என்ற மைல்கல்லினை எட்டியது இவ்வருடத்திலேயாகும்.
2) டுவிட்டர்
இவ்வருடத்தில் மைக்ரோ புளகிங் தளமான டுவிட்டர் 200 மில்லியன் பாவனையாளர்கள் என்ற இலக்கினை எட்டியது.
3) டயஸ்போரா மற்றும் கூகுள் +1
பேஸ்புக்கிற்கு போட்டியாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட இரண்டு தளங்களும் இதுவரை வெளியாகவில்லை.
எனினும் செய்திகள் வெளியாகிய வண்ணமே உள்ளன.
4) பேஸ்புக் - ஸ்கைப் இணைவு
பேஸ்புக் மற்றும் ஸ்கைப் ஆகியன ஒன்றாக இணைந்ததும் இவ்வருடத்திலேயாகும்.
கூகுள்
1) கூகுள் தானியங்கிக் கார்
கூகுள் முதன்முறையாக தனது தானியங்கிக் காரை பரீட்சித்துப் பார்த்து அதில் வெற்றியும் பெற்றது.
2) கூகுளின் 'குரோம் நெட்புக்'
கூகுள் தனது குரோம் இயங்குதளத்தை ( Chrome Operating System ) கொண்டியங்கும் நெட்புக் கணனிகள் தொடர்பான அறிவிப்பை மேற்கொண்டது.
இவற்றைத்தவிர முக்கிய விடயங்களாக,
1) ஈரானை உலுக்கிய ' ஸ்டக்ஸ்னெட்' வைரஸ்
அதி மேம்பட்ட வைரஸாக இது கருதப்படுகின்றது. ஈரானின் அணு உலைகளில் செயற்பட்டு வரும் கணனிகளைத் தாக்கவே இது ஏவப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.
2) சீனாவின் அதிவேக சுப்பர் கணனி
டியானி (Tianhe) - 1 A என்ற அதிவேக கணனியை இவ்வருடத்தில் சீனா மீள் அறிமுகம் செய்தது.
இதன் வேகம் 2.507 பீடாபுலொப்ஸ் (Petaflops). அதாவது ஒரு செக்கனில் 2,507 ட்ரில்லியன் கணிப்புகளை மேற்கொள்ளக்கூடியதாகும்.
3) பிளக்பெரிக்குத் தடை
சவூதி உட்பட சில நாடுகள் பிளக்பெரிக்கு தடை விதிப்பதாக அறிவித்திருந்தன . இதன் சிக்கலான என்கிரிப்ஷன்களே இதற்கான காரணம் எனக் கூறப்பட்டது. எனினும் பின்னர் இத்தடை அறிவிப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது. _

கணணி தொழிநுட்பம்,
தொழிநுட்ப செய்தி,
தொழிநுட்பம்
Monday, January 3, 2011
ஸ்கைப்பில் எழுந்த திடீர் பிரச்சினை
பிரபல தொடர்பாடல் சேவையான ஸ்கைப்பினுள் நுழையமுடியவில்லையா?
அத்தொழிநுட்ப கோளாறிற்கு முகங்கொடுப்பது நீங்கள் மட்டுமல்ல!
இதனை உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு பாவனையாளர்கள் தற்போது எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றனர்.
( இச்செய்தி எழுதப்படும் வரை)
இது தொடர்பாக ஸ்கைப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தொழில்நுட்பக் கோளாறு இடம்பெற்றுள்ளதாகவும் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அதனை சரி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்கைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

___
அத்தொழிநுட்ப கோளாறிற்கு முகங்கொடுப்பது நீங்கள் மட்டுமல்ல!
இதனை உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு பாவனையாளர்கள் தற்போது எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றனர்.
( இச்செய்தி எழுதப்படும் வரை)
இது தொடர்பாக ஸ்கைப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தொழில்நுட்பக் கோளாறு இடம்பெற்றுள்ளதாகவும் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அதனை சரி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்கைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
Labels:
கணணி தொழிநுட்பம்,
தொழிநுட்ப செய்தி,
தொழிநுட்பம்
Subscribe to:
Posts (Atom)