AIESEC எனும் மாணவர் அமைப்பு இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. எதிர்காலத்துக்கான சிறந்த தலைமுறையை உருவாக்குவதற்காக 110 நாடுகள் இந்த அமைப்புடன் கைகோர்த்துள்ளன.
இவ்வமைப்பு 1995 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களையும் ஒன்றிணைத்துத் தனது செயற்திட்டங்களை நம் நாட்டில் ஆரம்பித்தது.
நாளை நடைபெறவுள்ள செயலமர்வில் சுமார் 1000 பேர் வரை கலந்துகொள்வர் என அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தன்னிலை அறிதல், இலட்சியங்களுக்கான ஏற்பாடுகளும் திட்டமிடலும், ஆளுமை விருத்தி, சுயமாக தலைமைத்துவத்தை உருவாக்கிக் கொள்ளல், ஒன்றிணைந்த செயற்திட்டம், உள்ளக நிகழ்ச்சித் திட்ட அறிமுகம் உள்ளிட்ட செயற்பாடுகள் நாளைய தினம் பயிற்றப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment