நாம் ஆங்கிலத்தில்டைப் அடிப்பதை பார்த்தோம். அதுபோல் தமிழில்
தட்டச்சு செய்வதை இப் போது பார்ப்போம். முன்பு கூறியபடி Font தேர்வு செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கான Font க்கான சாரளம் ஒப்பன் ஆகும். அதில் தமிழுக்கான எழுத்துருவை தேர்வு செய்யுங்கள். நான் பாமினி எழுத்துருவை தேர்வு செய்துள்ளேன்.
நீங்கள் விரும்பும் எழுத்துரு, அதன் அளவு, மற்றும் அமைப்பு (Font -Font Style - Font Size ) தேர்ந்தேடுத்து ஓகே கொடுங்கள்.

உங்கள் On-Screen Keyboard ஆனது தமிழுக்கு மாறி விட்டதை பாருங்கள். இனி நீங்கள் தமிழுக்கு எந்தெந்த எழுத்து எங்கு உள்ளது என தேட வேண்டாம். ஸ்கிரீனை பார்த்தே தட்டச்சு செய்து கொள்ளலாம். இதில் உள்ள Caps Lock கி அழுத்தினால் உங்களுக்கு கணிணியில் திரை மாறுவதை காணலாம்.

இதன் முலம் நீங்கள் தட்டச்சு செய்து கொள்ளலாம்
No comments:
Post a Comment