Showing posts with label USB Flash Drive. Show all posts
Showing posts with label USB Flash Drive. Show all posts

Saturday, December 25, 2010

யு.எஸ்.பி. போர்டில் சிக்கல்களா? தீர்வு இதோ

இன்று கம்ப்யூட்டர் சார்ந்து நாம் அனைவரும் பயன்படுத்தும் ஒரு துணை சாதனம் எது என்றால் அது பிளாஷ் டிரைவ், பென் டிரைவ் மற்றும் தம்ப் டிரைவ் என அழைக்கப்படும் போர்ட்டபிள் பிளாஷ் டிரைவ் தான். எனவே இவற்றைப் பயன்படுத்துகையில் சிக்கல்கள் ஏற்பட்டால் நமக்கு எரிச்சல் ஏற்படத்தான் செய்திடும்.





பல வாசகர்கள் தங்கள் யு.எஸ்.பி. போர்ட்டில் பிளாஷ் டிரைவ்களைச் செருகுகையில் சிஸ்டம் அவற்றைக் கண்டு கொள்ள மறுக்கிறது என்றும் அதனை எப்படி சரி செய்திடலாம் என்றும் கேட்டு கடிதங்களை எழுதியுள்ளனர். மேலும் பலர் வேறு வகையான பிரச்னைகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளனர். அவற்றிற்கான சில தீர்வுகளை இங்கு காணலாம். முதலில் யு.எஸ்.பி. போர்ட்டில் உள்ள இரண்டு வகைகள் குறித்து அறிந்துகொள்ளலாம்.


USB 1.1: இவ்வகையே முதலில் வந்தவை. இவை விநாடிக்கு 1.5 எம்பி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வேகத்தில் இருக்கும். பழைய மாடலில் உள்ள சீரியல் மற்றும் பேரலல் போர்ட் இணைப்புகளுக்கு மாற்றாக யு.எஸ்.பி. போர்ட் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தினுடன் தான் இவை வடிவமைக்கப்பட்டிருந்தன. மவுஸ் மற்றும் கீ போர்டுகள் இணைப்பதற்கே இவை பயன்பட்டு வந்தன. பெரிய அளவிலான டேட்டா பரிமாற்றத்தின் போது இவை திணறின. இதனால் இரண்டாவதாக USB 2.0 வெளிவந்தது. இது ஒரு நொடியில் 480 எம்பி அளவிலான தகவல்களை அனுப்பிப் பெற்றது. இதனால் பெரிய அளவிலான தகவல் பரிமாற்றத்திற்கு இந்த வகை யு.எஸ்.பி. போர்ட் சாதனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

இந்த இரண்டில் எது தங்களிடம் உள்ளது என்று தெரிந்து கொள்வது எப்படி என்று பல வாசகர்கள் வினா எழுப்புகின்றனர். மாடலைத் தெரிந்து கொள்ள கீழ்க்காணும் வகையில் செயல்படவும். Start&get; My Computer Properties சென்று Properties கிளிக் செய்திடவும். இதில் Hardware டேபில் கிளிக் செய்து பின் Device Manager கிளிக் செய்யவும். கிடைக்கும் பட்டியல் அடிப்பாகத்தில் Universal Serial ஆதண் controllers என்பதனை அடுத்து கூட்டல் (plus sign) அடையாளம் இருக்கும். இதில் கிளிக் செய்திடவும். உங்களுடைய கம்ப்யூட்டரில் USB 1.1 இருந்தால் அங்கு Host Controller or Open Host Controller என்றபடி ஒன்று அல்லது இரண்டு சாதனங்கள் தெரியும். உங்களுடைய கம்ப்யூட்டரில் க்குஆ 2.0 இருந்தால் அங்கு Enhanced Host Controller or USB 2.0 Controller என்று காட்டப்படும். நீங்கள் எந்த யு.எஸ்.பி. சாதனம் வாங்கினாலும் அதில் வழக்கமான சிகப்பு, வெள்ளை மற்றும் நீலம் கலந்த யு.எஸ்.பி. லோகோ இருக்கும்.

நீங்கள் அதிவேக யு.எஸ்.பி. சாதனத்தை குறைந்த வேகம் கொண்ட யு.எஸ்.பி. போர்ட்டில் செருகினால் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்த சாதனம் கூடுதல் வேக போர்ட்டில் இணைக்கப்பட்டால் இன்னும் வேகமாக இயங்கும் என்ற செய்தியைத் தரும். ஆனால் பலர் தெரிவித்துள்ள பிரச்னை என்னவென்றால் தாங்கள் யு.எஸ்.பி. தம்ப் டிரைவைச் செருகினால் அதனை கம்ப்யூட்டர் அறிந்து கொள்வதே இல்லை என்பதே. பொதுவாக ஒரு யு.எஸ்.பி. தம்ப் டிரைவினை கம்ப்யூட்டரில் செருகியவுடனேயே அதனை விண்டோஸ் எக்ஸ்பி புரிந்து கொண்டு டாஸ்க் பாரில் புதிய பிரித்தெடுக்கக் கூடிய ஹார்ட் டிரைவ் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கும்.

அத்துடன் ஒரு கட்டத்தில் இதில் உள்ள போல்டரைத் திறந்து பைல்களைக் காட்டவா? ஆடியோ பைல்களை இயக்கவா? விடியோ பைல்களை இயக்கவா? என்ற செய்தி கேட்கப்படும். இந்த சாதனத்திற்கு டிரைவ் லெட்டர் ஒன்றை விண்டோஸ் ஒதுக்கும். ஆனால் இந்த செய்திகள் எல்லாம் வரவில்லை என்றால் நீங்கள் செருகியுள்ள சாதனத்திற்கும் விண்டோஸ் கொண்டுள்ள டிரைவருக்கும் ஏதோ பொருந்தவில்லை என்று பொருள். இதனைக் கீழ்க்கண்டவாறு சரி செய்திடலாம். Start/Control Panel சென்று அங்கு Administrative Tools. என்று இருக்கும் இடத்தில் இரு முறை கிளிக் செய்திடவும். சில வேளைகளில் ஸ்டார்ட் மெனுவிலேயே நேரடியாக Administrative Tools பெற முடியும். அதில் Computer Management என்ற இடத்தில் இரு முறை கிளிக் செய்திடவும். இந்தப் பிரிவின் இடது புறத்தில் Disk Management என்றிருப்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். வலது பக்கம் a removable drive என்றபடி ஒரு டிரைவ் காணப்படும். இது ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் டிரைவின் பெயர் எழுத்து கொண்டதாக இருக்கலாம். இந்த எழுத்தைக் கொண்டிருக்கும் வெள்ளை பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Change Drive Letter and Paths என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். எந்த எழுத்து வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து அதன்பின் Change என்பதில் கிளிக் செய்திடவும்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் எழுத்து ஏற்கனவே பயன்படுத்தப்படாததாக இருக்க வேண்டும். இனி முதலில் நீங்கள் ஓகே கிளிக் செய்தவுடன் பின் ஒரு எச்சரிக்கை செய்தி கிடைக்கும். இதிலும் ஓகே கிளிக் செய்திடவும். இனி கம்ப்யூட்டர் மேனேஜ்மெண்ட் கன்சோலை மூடவும். இப்போது மை கம்ப்யூட்டர் ஐகானைக் கிளிக் செய்து யு.எஸ்.பி. டிரைவிற்கான எழுத்தினைப் பார்த்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த எழுத்து தெரியவரும்.


யு.எஸ்.பி. போர்ட்டுகளில் வேறு சில வகையான பிரச்னைகளையும் எதிர்கொள்ளலாம். யு.எஸ்.பி. போர்ட்டில் உள்ள சாதனம் ஒன்று செயல்படாமல் போகலாம். இதற்குக் காரணம் கம்ப்யூட்டரின் உள்ளாக ஏற்படும் பவர் ஷார்ட்டேஜ் பிரச்னை தான். இது பெரும்பாலும் யு.எஸ்.பி. 1.1. வகை போர்ட்டுகளில் தான் ஏற்படும். அதுவும் விண்டோஸ் 2000 இயக்கத்தொகுப்பு மற்றும் அதற்கு முந்தைய தொகுப்புகளைப் பயன்படுத்துகையில்தான். இப்பொழுது xp யிலும் ஏற்படுகிறது

இவ்வாறு ஏற்படுகையில் யு.எஸ்.பி. போர்ட்டுகளில் இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு பின் ஒவ்வொன்றாக இணைக்கவும். இது ஓரளவிற்கு பிரசனையைத் தீர்த்து வைத்திடும். இப்போது வருகின்ற கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் நான்கு யு.எஸ்.பி. போர்ட்டுகள் கொடுக்கப்படுகின்றன. பின்னால் இரண்டும் முன்னால் இரண்டுமாக இவை அமைக்கப்படுகின்றன. விண்டோஸ் 7 வகை இயக்கத் தொகுப்புகள் இவற்றைச் சீராக எந்தவித பிரச்னையும் ஏற்படாத வகையில் இயக்கும்படியும் அமைக்கப்படுகின்றன.

"பென் டிரைவ்" என்றால் என்ன அதை எப்படி தயாரிக்கிறார்கள்?

ஒரு யூஎஸ்பி(USB) ஃபிளாஷ் டிரைவ் USB 1.1. அல்லது 2.0 இடமுகப்புடன் ஒருங்கிணைந்த ஃபிளாஷ் மெமரி தரவு சேமிப்பு கருவியைக் கொண்டது. USB ஃபிளாஷ் டிரைவ்கள் ஃபிளாப்பி தகடுகளை விட சிறியதாகவும்,
 1 அவுன்ஸ் (28 கிராம்) எடையை விட குறைந்தவையாகவும், வெளியே எளிதில் எடுக்கவும், பல முறை தரவுகளை சேமிக்கக் கூடிய வகையிலும் இருக்கும். சேமிப்பு அளவுகள் ஒரு சில மெகாபைட்களில் இருந்து 256 கிகாபைட்கள் (GB) வரை கூட இருக்கலாம். அளவில் தொடர்ந்து வளர்ச்சியும், அளவைப் பொறுத்து விலையும் மாறி வரும். சில 1 மில்லியன் எழுத அல்லது அழிக்கும் சுழற்சியை அனுமதிக்கின்றது. இவை 10 வருடங்கள் வரை தரவுகளை தக்கவைத்துக்கொள்ளலாம்.

ஃபிளாப்பி தகடுகள் எதற்காக உபயோகப்படுத்தப்பட்டனவோ அதே போலவே USB ஃபிளாஷ் தகடுகளும் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவற்றில் நகரும் பாகங்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் இவை நம்பகத்தன்மை மிக்கவையாகவும், எளிதில் உடையாத வகையிலும், ஆயிரம் மடங்குகள் சேமிப்பு அளவு மிக்கவையாகவும், சிறியதாகவும், வேகம் மிக்கவையாகவும் உள்ளன. தோராயமாக 2005 வரை, பெரும்பாலான மடிக்கணிணிகள் மற்றும் மேஜை கனிணிகளோடு ஃபிளாப்பி தகடுகள் கொடுக்கப்பட்டன. ஆனால் தற்போதைய கனிணிகள் ஃபிளாப்பி தகடுகளை முற்றிலும் நிறுத்தி விட்டு USB டிரைவ்களுக்கு மாறிவிட்டன.

Unix போன்ற முறைகள், Linux, Mac OS X, Windows போன்ற நவீன இயக்க முறைகளுக்கு உகந்த USB அதிக சேமிப்பு தரத்தை ஃபிளாஷ் டிரைவ்கள் உபயோகிக்கின்றன. பெரிய ஆப்டிகல் தகடு டிரைவ்களை விட USB 2.0 விற்கு உகந்த USB டிரைவ்கள் அதிக தரவுகளை சேமிக்க மற்றும் வேகமாக தரவுகளை மாற்றவும் செய்யும் மற்றும் Microsoft Xbox 360 போன்ற பல மற்ற முறைகளாலும் படிக்க இயலும்.



ஒரு ஃபிளாஷ் டிரைவில் எதுவுமே இயந்திரத்தனமாக நகராது; டிரைவ் என்ற வார்த்தையே இதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால், கணினிகள் ஃபிளாஷ்-டிரைவ் தரவை ஒரு இயந்திர தகடு டிரைவில் எப்படி தரவு படித்து எழுதுகின்றனவோ அப்படியே இதிலும் செய்கின்றன. கணினி செயற்படுத்தும் அமைப்பிலும் பயன்படுத்துபவர் இடைமுகப்பிலும் காணப்படும் சேமிப்பை மற்றொரு டிரைவ் என்றே கருதுகிறது. ஃபிளாஷ் டிரைவ்கள் இயந்திரஙகளாக பார்க்கும்போது மிகவும் உறுதியானவையாக இருக்கின்றன. சுற்று மற்றும் கனெக்டர் உடையாத வரையில் இது எந்த அழுத்தத்தையும் தாங்கும் சக்தியுடையதாக உள்ளது.

ஒரு ஃபிளாஷ் டிரைவ் மின் துகள்கள் மற்றும் ஒரு USB இணைப்பு கருவி ஆகியவற்றை கொண்டிருக்கும் ஒரு சிறிய அச்சு செய்யப்பட்ட மின் தொடர்பு அட்டையை உள்ளடக்கி இருக்கும். இவை மின்சாரத்தால் காப்பிடப்பட்டு, பிளாஸ்டிக், இரும்பு அல்லது ரப்பரினால் ஆன பெட்டியில் பாதுகாக்கப்பட்டு இருக்கும். உதாரணமாக இதை ஒரு பை அல்லது சாவி கொத்தில் வைத்து எடுத்துச் செல்லலாம். USB இணைப்புக் கருவி ஒரு எடுக்கக்கூடிய மூடியால் பாதுகாக்கப்படலாம் அல்லது டிரைவின் உள்ளேயே இழுத்துக் கொள்ளக் கூடிய வகையில் இருக்கலாம். ஆனால், அது பாதுகாக்கப்படவில்லை என்றாலும் பாழாவதற்கான வாய்ப்புகள் இல்லை. பெருவாரியான ஃபிளாஷ் டிரைவ்கள் பொதுவான வகை-A USB இணைப்பை உபயோகிக்கின்றது,. இது ஒரு தனிப்பட்ட கனிணியில் ஃபிளாஷ் டிரைவை சொருக ஏதுவாக ஆக்குகிறது, ஆனால் மற்ற இடமுகப்புகளுக்கான டிரைவ்களும் உள்ளன

பெருவாரியான USB டிரைவ்கள் தங்களுக்கான மின்சாரத்தை USB இணைப்பில் இருந்தே பெற்றுக் கொள்ளும், அவற்றிற்கு தனியாக பேட்டரிகள் தேவைப்படாது. டிஜிட்டல் ஒலிதம் கருவியின் செயல்பாட்டோடு ஃபிளாஷ் டிரைவ் வகை சேமிப்பு இணைந்த கருவிகளுக்கு பாடல் கருவி வேலை செய்ய பேட்டரி தேவைப்படும்.

Pen Drive எப்படி தயாரிக்கிறார்கள் என்று இந்த Video-வில் உள்ளது.

இது Kingston Production Plant ல்-எடுக்கப்பட்டது.

How's a USB Flash Drive Made Trip to the Kingston Production Plant
video
Related Posts Plugin for WordPress, Blogger...