ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக இரசிகர்களால் அதிக விரும்பி பார்க்கப்படும் ஒரே விளையாட்டாக கால்பந்தாட்ட உலகக்கிண்ண போட்டிகளே திகழ்கின்றன.
உலகக்கிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்டிகள் என இவை வர்ணிக்கப்படுகின்ற நிலையில் 2010 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்பதற்காக 204 நாடுகள் தகுதிகாண் போட்டிகளில் களமிறங்கின.
2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் 2009 நவம்பர் 18 ஆம் திகதி வரை வரை நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் 204 நாடுகள் கமளிறங்கினாலும் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு 32 நாடுகளுக்கே சந்தர்ப்பம் கிடைத்துள்ளன.
போட்டியை முன்னின்று நடத்தும் தென் ஆபிரிக்கா மாத்திரம் தகுதிகாண் போட்டிகளின்றி நேரடியாக உலகக்கிண்ணத்தில் விளையாடுவதற்கு தகுதிபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
32 நாடுகளும் எட்டுக்; குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் உள்ளன.
ஓவ்வொரு குழுவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் 16 அணிகள் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும். இரண்டாம் குழுவில் நொக் அவுட் முறையில் போட்டிகளில் நடைபெறும்.
இரண்டாம் சுற்றில் வெற்றிபெறும் 8 அணிகள் கால் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். கால் இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் நான்கு அணிகள் அரை இறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெறும்.
அரை இறுதிப் போட்டியில் நுழையும் நான்கு அணிகளில் இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு நுழைவதுடன் அரை இறுதியில் தோல்வியுறும் இரண்டு அணிகளும் மூன்றாம் இடத்தை தீர்மானிக்கும் போட்டியில் பங்குபற்றும்.
உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளில் பங்குபற்றும் அனைத்து அணிகளும் தற்போது தென் ஆபிரிக்காவில் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில் தாம் விரும்பும் அனைத்து கால்பந்தாட்ட வீரர்களையும் ஒருமித்து காணும் நோக்கில் உலகெங்கும் பரந்து வாழும் கால்பந்தாட்ட இரசிகர்கள் தென் ஆபிரிக்காவை முற்றுகையிட்டுள்ளனர்.
பெருந்திரளான கால்பந்தாட்ட வீரர்களும் இரசிகர்களும் தென் ஆபிரிக்காவில் முற்றுகையிட்டுள்ளதன் காரணமாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இம்முறை உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ஆபிரிக்க கண்டத்தில் முதற்தடவையாக நடைபெறுவதுடன் தென் ஆபிரிக்காவிலுள்ள 10 மைதானங்களில் இந்த போட்டிகள் யாவும் நடைபெறவுள்ளன.
No comments:
Post a Comment