ஒவ்வொரு format-இற்கும், கோப்புகளின் வீடியோ தரம் குறையாமல், கொள்ளளவு மட்டும் குறைப்பதற்குத் தனி algorithm உபயோகிப்பர். அதையே Codec என்போம். ஒவ்வொரு வித video format-க்கும் ஒவ்வொரு player நிறுவ வேண்டும் என்று அவசியம் இல்லை. அதற்குப் பதில், அதன் codec-ஐ மட்டும் நமது கணினியில் நிறுவினால் போதும், மேலே கூறிய அனைத்து வகை கோப்புகளும் "Windows Media Player"-இலேயே பார்க்கலாம். “Windows® Essencials Codec Pack” என்ற codec pack-ஐ நிறுவினால், போதும். அனைத்து வகை கோப்புகளும், உங்கள் “Windows Media Player"-இலேயே பார்க்கலாம்.மேலும் இது மொத்தமே 6mb தான்.
Windows® Essencials Codec Pack தரவிறக்கம் செய்திட, இங்கே செல்லவும் .
Windows Media Player-ல் MKV கோப்புகளும், flv கோப்புகளும் மட்டும் play ஆகாது, "Media Player Classic" என்ற மென்பொருளைத் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.
WECP support செய்யும் அனைத்து வீடியோ format-களும்.
இப்பொழுது முற்றிலும் இலவசமாக உங்கள் மொபைலில் இருந்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம்,
இதற்கு உங்களிடம் 3G வசதி(வீடியோ கால் வசதி) கொண்ட நோக்கியா or iphone மொபைல் இருக்கவேண்டும் (3G நெட்வேர்க் இருக்கவேண்டிய அவசியம் இல்லை),
உங்கள் மொபைலில் GPRS வசதியை activate செய்து அதன் பின்பு உங்கள் மொபைலில் இருந்து http://www.fring.com/ என்ற இணையத்தளத்துக்கு சென்று fring என்ற mobile application ஐ டவுன்லோட் செய்க.பின்பு ஏதாவது voip account ஒன்றை registrar செய்ய வேண்டும். (உதாரணமாக voipcheap , voipwise , smartvoip , jumblo). பின்பு உங்கள் மொபைல் இல் நீங்கள் டவுன்லோட் செய்த fring ஐ open செய்து உங்களுக்கென்று ஒரு account ஐ registrar செய்க. பின்பு முறையே
option-> setting -> configure service -> SIP -> other -> user ID and Password ஐ type செய்து proxy address என்ற இடத்தில் proxy address ஐ type செய்ய வேண்டும் (உதாரணமாக sip.voipcheap.com , sip.voipwise.com , sip.smartvoip.com , sip.jumblo.com ).
பின்பு ok கொடுத்து main மெனுவிற்கு சென்று option -> setting -> show phone contact ஐ select செய்ய வேண்டும். இப்பொழுது உங்கள் மொபைல் இல் save செய்துள்ள contact number களின் list உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் யாருக்கு call செய்ய வேண்டுமோ அந்த number ஐ select செய்து option -> call -> SIP call ஐ select செய்யுங்கள். உங்களின் மொபைல் இல் இருந்து அழைப்பு ஏற்படுத்தப்படுவதை மொபைல் இன் screen இல் காணலாம்.....
NOTE: voip account களில் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது..... voip account பற்றிய மேலதிக விபரங்களுக்கு click hear--> voipcheap , voipwise , smartvoip , சும்ப்லோ
எத்தனையோ முறை விண்டோஸ் இயங்குதளம் முரண்டு பிடித்திருக்கிறது. எதாவது ஒரு தளத்தைப் பார்வையிடும்போதோ, குறிப்பிட்ட மென்பொருளைப் பயன்படுத்தும்போதோ இயங்குதளம் கேட்பாரின்றி அப்படியே கிடக்கும்.
இதை ஹேங்கிங் [ HANGING] என்பார்கள். என்ன செய்தாலும் நமது கட்டுக்குள் வந்து தீராது.
உலாவி கூடப் பல நேரங்களில் அப்படியே நின்று நமது பொன்னான நேரத்தை வீணடிக்கும். அப்போது அந்த அப்ளிகேசனை அப்படியே நிறுத்திவிட முயற்சி செய்வோம். எதுவும் நடக்காது.
இந்த மாதிரியான சமயத்தில் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் இணையத்தில் உள்ளது.
உங்களிடம் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் கோப்புகள் இருந்தால் (அதாவது வைரசு தொற்றி இருக்குமோ என்ற வகையில்) அவற்றை வைரசுடோட்டல் என்னும் இந்த தளத்தில் ஏற்றிச் சோதித்துப் பாருங்கள்.
இந்தத் தளத்தில் இலவசமாகவே மொத்தம் 32 வைரசு எதிர்ப்பான்களைக் கொண்டு இந்த ஏற்றப்பட்ட கோப்புகளை சோதித்து உடனே முடிவுகளை அறிவித்துவிடுகிறார்கள்.
உங்கள் சந்தேகமும் தெளிவாகிவிடும். இலவசச் சேவை இணையத்தில் இங்கே கிடைக்கும்போது சோதனை மேல் சோதனை போதுமடா சாமியென்று ஏன் பாடவேண்டும்.
முடிவுகள் இவ்வாறு தெளிவான அறிக்கையாகக் கிடைக்கிறது.
79 inverted comma வை உங்கள் மொபைல் இல் டைப் செய்து (அதாவது ''''' என்று 79 தடவை ) உங்கள் Friend இன் மொபைல் இற்கு SMS ஆக அனுப்பவும்.
இந்த tricks Nokia 1110,1110i,1112,1100, 2100 ற்கு மட்டுமே பொருந்தும். NOTE: உங்களது mobile மேற்குறிப்பிட்ட Nokia 1110,1110i,1112,1100, 2100 ஆக இருந்தால் உங்களால் இந்த SMS ஐ type செய்து அனுப்ப முடியாது.
இணையத்தின் பெரும் சக்தியான கூகிள் தனது புதிய இயங்குதளமான கூகிள் குரோம் ஓஎஸ்சை திறந்த வெளி (Open Source) மென்பொருளாக 19 நவம்பர் 2009 அன்று அறிமுகப்படுத்தி உள்ளது. கூகிள் புதிய இயங்குதள தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பதாக அதற்கு கூகிள் குரோம் ஓஎஸ் என்று பெயரிட்டு கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. நேற்று அதற்கான திறந்தவெளி நிரலை வெளியிட்டு உள்ளது.
கூகிள் குரோம் ஓஎஸ் என்பது என்ன? அது என்னவெல்லாம் சேவை வழங்க போகிறது என்பதை சற்றே விளக்கமாக பார்ப்போம். கணினியை பொறுத்தவரை சராசரி பயனர் என்ன பயன்பாடுகளுக்கு உபயோகிக்கிறார்? நம்மையே எடுத்து கொள்ளுவோம். கணினியை துவக்கிய பின் நேரடியாக இணைய உலாவியை திறந்து கொள்ளுகிறோம். ஈமெயில், யூடியுப், நண்பர்களுடன் அரட்டை, தளங்களை வாசித்தல் என்று பெரும்பாலும் நமது நேரத்தை இணையத்தில் செலவு செய்கிறோம். முடிந்தவுடன் இணைய உலாவியை மூடி விட்டு கணினியை சட்டவுன் செய்து விடுகிறோம். நமது பெரும்பாலான நேரம் இணைய உலாவியில் தான் செலவாகிறது. கணினியில் உள்ள மற்ற ப்ரோக்ராம்களை மென்பொருள்களை உபயோகிப்பது என்பது மிக குறைவே.
இந்த விஷயத்தை தான் கூகிள் தனது குரோம் ஓஎஸ் இயங்குதளத்திற்கு மூல மந்திரமாக எடுத்து உள்ளது. பெரும்பாலும் மற்ற மென்பொருள்களை உபயோகிக்காத போது அவற்றை கணினியில் ஏன் அடைத்து வைக்க வேண்டும்? வைரஸ் பாதுகாப்பு என்று ஏன் பயனரை சிக்கலுக்கு உள்ளாக்க வேண்டும்?
கூகிள் குரோம் ஓஎஸ்சை பொறுத்தவரை நீங்கள் உங்கள் கணினியில் எதையுமே நிறுவ தேவை இல்லை. அனைத்துமே இணைய அப்ளிகேஷன்கள்தான். அவை மென்பொருள் நிறுவனங்களில் செர்வரில் பாதுகாப்பாக இருக்கும். கூகிள் குரோம் ஓஎஸ் கணினியை திறந்தவுடன் அது இணையத்திற்கு சென்று விடும்.
உதாரணத்திற்கு நீங்கள் ஒரு ஆவணத்தை உருவாக்க, எடிட் செய்ய வேண்டும். சாதரணமாக நீங்கள் மைக்ரோசாப்ட் வோர்ட் உபயோகித்து வந்து இருப்பீர்கள். கூகிள் குரோம் ஓஎஸ்சை பொறுத்தவரை இணையத்தில் அதற்கான ஒரு அப்ளிகேஷன் வழங்கப்படும் அதனை நீங்கள் உபயோகித்து கொள்ளலாம். உதாரணத்திற்கு கூகிள் டாக்ஸ். http://docs.google.com/ . மற்றும் விண்டோஸ்சில் .EXE கோப்பு போன்று இங்கு எதனையும் இயக்க முடியாது. அதற்கான தேவையும் இங்கு இல்லை.
கூகிள் குரோம் ஓஎஸ் பற்றி இந்த வீடியோ பாருங்கள்
இது போன்று உங்கள் பெரும்பாலான தேவைகளுக்கு (படங்கள் உருவாக்குதல், வீடியோ உருவாக்குதல் உள்ளிட்ட) இணையத்தில் உள்ள அப்ளிகேஷன்கள் வழங்கப்படும். எதையும் நீங்கள் கணினியில் நிறுவி வைத்து கொள்ள தேவை இல்லை. உபயோகித்த பின்பு நீங்கள் உருவாக்கும் கோப்புகளை நீங்கள் இணையத்திலே சேமித்து வைக்கலாம். அல்லது உங்கள் USB, மெமரி கார்டு போன்றவற்றில் சேமித்து கொள்ளலாம். சுருங்க சொல்ல வேண்டும் எனில், உங்கள் கோப்புகளை கூகிள் , மென்பொருள் நிறுவனங்களே இணையத்தில் பாதுகாக்க போகிறது. நீங்கள் உலகின் எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை அணுகி கொள்ளலாம்.
இதன் சாதகங்கள் என்ன என்று கூகிள் சொல்வதை பார்ப்போம்.
1. கூகிள் குரோம் ஓஎஸ்சின் தாரக மந்திரம் வேகம், எளிமை மற்றும் பாதுகாப்பு (Speed, Simplicity, and Security) . வேகம் : கூகிள் குரோம் ஓஎஸ் அதி வேகத்தில் திறக்கும் என்கிறார்கள். தற்போது ஏழு வினாடிகளில் பூட் ஆகிறது. கூகிள் குரோம் பூட்டிங் குறித்த இந்த வீடியோவை பாருங்கள்
எளிமை : கூகிள் குரோம் திறந்தவுடன் இணைய உலாவிதான் எல்லாம். அதிலேயே அனைத்தும் இருக்கும். இணைய உலாவியை உபயோகிக்க தெரிந்து அனைவரும் எளிமையாக கூகிள் குரோம் உபயோகிக்கலாம். கூகிள் குரோம் ஓஎஸ் பயன்பாடு குறித்த இந்த வீடியோவை பாருங்கள்.
பாதுகாப்பு : அனைத்து அப்ளிகேஷன்களும் இணைய மென்பொருள்கள் என்பதால், எந்த மென்பொருளும் உங்கள் கணினியில் நிறுவுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை. இதனால் வைரஸ், அட்வேர் போன்ற தாக்குதலுக்கு வாய்ப்பில்லை. கூகிள் குரோம் ஓஎஸ் பாதுகாப்பு குறித்த இந்த வீடியோ பாருங்கள்.
2. கூகிள் குரோம் ஓஎஸ், தோற்றத்தில் குரோம் இணைய உலாவியை போன்றே இருக்கும். இடது புறத்தில் இணைய அப்ளிகேசன்களுக்கு என்று தனியே ஒரு டேப்(Tab) இருக்கும். ஒவ்வொரு இணையதளத்தையும் நீங்கள் தனித்தனி டேப்களில் திறந்து பார்ப்பது போன்று கூகிள் அப்ளிகேஷன்களை தனித்தனி டேப்களில் திறந்து வேலை செய்து கொள்ளலாம்.
3. கேமராவில் / மொபைலில் வைத்துள்ள புகைப்படங்கள், கோப்புகள் போன்றவதை அணுக நீங்கள் அவற்றை கணினியுடன் இணைத்து இணையத்தில் நேரடியாக ஏற்றி வேலைகளை செய்து கொள்ள முடியும்.
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. கூகிள் குரோம் ஓஎஸ்சை எப்படி வாங்குவது, கணினியில் எப்படி நிறுவுவது?
கூகிள் குரோம் ஓஎஸ்சை தனியே DVD யில் வாங்கி கணினியில் நிறுவுவது என்ற வேலை இல்லை. நேரடியாக கூகிள் குரோம் ஓஎஸ் கணினிகலாகவே வாங்க வேண்டியதுதான். உதாரணத்திற்கு நாம் மொபைல் வாங்கும் பொழுது அந்த நிறுவனத்தின் இயங்குதளத்துடன் அனைத்தும் நிறுவியே வருமே அது போல. கூகிள் குரோம் கணினிகள் என்று தனியே விற்பனைக்கு வரும். இதற்கான முயற்சிகளை இன்டெல், அசுஸ், HP போன்ற நிறுவனங்களுடன் கூகிள் எடுத்து வருகிறது. விண்டோஸ் போல நீங்கள் கூகிள் குரோம் ஓஎஸ்சை அனைத்து கணினிகளிலும் நிறுவி கொள்ள முடியாது.
கூகிள் குரோம் ஓஎஸ் செயல்பாடு குறித்த இந்த டெமோ வீடியோ பாருங்கள் . அறிமுக விழாவில் கூகிள் குரோம் ஓஎஸ் இயக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ .
கூகிள் குரோம் ஓஎஸ் எப்பாது வர போகிறது. இன்னும் ஒரு வருடத்தில் பயனர்களுக்கு கிடைக்கும் என்று காலம் நிர்ணயித்து உள்ளார்கள். இது ஆரம்பத்தில் டெஸ்க்டாப் கணினிகள், லேப்டாப் கணினிகளுக்கு வர போவது இல்லை. நெட்புக் கணினிகளுடன் மட்டும் ஆரம்பத்தில் வரும். நாளடைவில் அனைத்து விதமான கணினிகளுக்கும் விரிவு படுத்தப்படும்.
நெட்புக் கணினிகள் என்பது சிறிய அளவிலாக லேப்டாப்கள் ஆகும். எட்டு முதல் 11 இன்ச் திரைகளுடன் எங்கும் எளிதில் கொண்டு சென்று உபயோகிக்கும் படி சிறிய அளவில் வருகின்றன. இவை மிகவும் அதிகமாக பரவி வருவதால், இதன் தேவை அதிகரித்து இருப்பதால் கூகிள் இங்கிருந்து ஆரம்பிக்கிறது.
ஓகே. இது என்ன விலை இருக்கும். மிக குறைந்த அளவில் வரலாம். கூகிள் கூறுவதை பார்த்தால் இந்த கணினியில் ஹார்டுடிஸ்க்கே தேவைப்படாது. நமது இந்திய ரூபாயில் பதினைந்தாயிரம் விலையில் ஆரம்பிக்கலாம். தொலைகாட்சி பெட்டிகள் போன்று கூகிள் குரோம் ஓஎஸ் பெட்டிகள் இல்லங்களில் ஆக்ரமிக்கலாம்.
இதனுடைய நீட்சி எந்த அளவில் இருக்கும்? மென்பொருள் நிறுவனங்கள், மென்பொருள்களை விற்பதுடன் மென்பொருள்களை இணையத்தில் வாடகைக்கு விடும் சேவையை வழங்கலாம். உதாரணத்திற்கு ஒரு புகைப்படத்தில் வேலை செய்ய உங்களுக்கு போட்டோஷாப் மென்பொருள் தேவை படுகிறது. அதன் விலை பல லட்சம் ரூபாய்கள். அதை எந்நேரமும் உபயோகிக்க போவதில்லை. சில மணி நேரங்கள் மட்டுமே தேவை படுகிறது. இது போன்ற சூழல்களில் நீங்கள் அந்த மென்பொருளை இணையத்தில் சில மணி நேரங்கள் உபயோகித்து கொள்ள முடியும். அதற்கு சிறிய அளவு வாடகை மட்டும் வசூலிப்பார்கள். இந்த கட்டணம் கூட உங்கள் தொலைபேசி, இணைய பில்களில் வரும் அளவு அதன் மூலம் செலுத்தும்படி இதன் பயன்பாடுகள் நீளலாம்.
இந்தியாவில் இது எந்த அளவுக்கு எடுபடும்? இந்தியாவில் இணைய இணைப்பு என்பது இன்னும் தடுமாற்றத்தில்தான் உள்ளது. மொபைல் போன்களை செல்லும் இடமெல்லாம் உபயோகித்து கொள்வது போல செல்லுமிடமெல்லாம் இணைய இணைப்பு பெற இன்னும் ஐந்து வருடங்கள் ஆகலாம். அது போன்ற நேரத்தில்தான் கூகிள் குரோம் ஓஎஸ்சின் பயன்பாடு முழுமையாக கிடைக்கும்.
இணைய இணைப்பு இல்லை என்றால் கூகிள் குரோம் ஓஎஸ் எதற்கும் பயன்படாது. அதாரம்
நாம் பெரும்பாலும் ஒபேரா மினி இணைய உலாவியின் நான்காம் பதிப்பைத்தான் உபயோகித்து வருவோம். ஒபேரா இப்போது அதன் ஐந்தாம் பீட்டா பதிப்பினை வெளியிட்டு உள்ளது. இது அதிக வசதிகளுடன் மேம்படுத்த்தப் பட்டு உள்ளது.
உங்களிடம் ஒபேரா மினி பழைய பதிப்பு இருந்தால் இந்த புதிய பதிப்புக்கு மாறி கொள்ளுங்கள். இது பெரும்பாலான மொபைல்களில் நன்றாக வேலை செய்கிறது. இதனை தரவிறக்க இங்கே செல்லுங்கள். அதன் சிறப்பம்சங்களை பார்ப்போம். 1. இது பழைய பதிப்பிலிருந்து முற்றிலும் மாற்றுபட்டது. தொடுதிரை (touchscreen) மொபைல்களை ஆதரிக்கிறது.
2. கணினி இணைய உலாவிகளை போன்று டேப்(Tabs) வசதிகளை கொண்டுள்ளதால் ஒரே நேரத்தில் பல இணைய பக்கங்களை திறந்து கொள்ள முடியும். மாறி கொள்ள முடியும்.
3. ஸ்பீட் டயல் வசதி மூலம் நாம் அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை முகப்பில் சேமித்து வைத்து கொண்டு அணுக முடியும்.
4. பாஸ்வேர்ட் மேனேஜர் மூலம் உங்கள் லாகின் பாஸ்வோர்ட் , பெயரையும் சேமித்து வைக்கலாம். இதன் மூலம் ஒரு இணைய பக்கத்துக்கு செல்லும் போது மீண்டும் மீண்டும் பாஸ்வோர்ட் கொடுக்க வேண்டிய தொந்தரவு இல்லை.
5. முன்பெல்லாம் மொபைலில் இணைய பக்கத்தில் உள்ள எழுத்துக்களை காப்பி செய்வது இயலாத காரியம். இப்போது இந்த பதிப்பில் அதனை செய்யலாம். இணைய பக்கத்தில் உள்ள வாசகங்களை காப்பி செய்து மற்ற மொபைல் அப்ப்ளிகேஷன்களில் பேஸ்ட் செய்து உபயோகிக்கலாம்.
இதன் பயன்பாடுகள் குறித்த இந்த வீடியோவை பாருங்கள்.
மொத்தத்தில் இந்த பதிப்பு மூலம் ஒபேரா தான்தான் இன்னும் மொபைல் இணைய உலாவிகள் சந்தையில் மாகாராஜா என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளது. மொபைலில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் இந்த ஒபேரா மினி பீட்டா பதிப்பை கட்டாயம் சோதித்து பாருங்கள்.
இணையத்தில் இப்போது கணனியில் வாசிப்பதற்கான மின்புத்தகங்கள்(EBooks) தாராளமாகவே கிடைக்கின்றன. கடைத்தெரு, நூல் நிலையம் என்று நடந்து சென்று நல்ல புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று அலைந்து திரிந்து களைத்துப் போய்விடாமல் வீட்டில் இருந்தபடியே கணனி மவுஸ் பட்டனை அழுத்தி விரும்பிய புத்தகங்களை தெரிவு செய்து படிக்கும் முறை நன்றாகத்தான் இருக்கிறது. அதைத்தவிர இணையத் தளங்களிலிருந்து இலவசமாகவே எத்தனையோ தமிழ், ஆங்கில மின் புத்தகங்களை சுலபமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடிகிறது.. தமிழில் அதிகளவு மின்புத்தகங்கள் கிடைக்கின்றன. ஈழத் தமிழ் மண்ணின் ஆக்கங்களாக திகழும் அரும்பெரும் நூல்களின் களஞ்சியமாக www.noolaham.net என்ற மின்நூலகம் திகழ்கின்றது. அதேபோல் தமிழக இணையத்தள இலவச நூலகங்களாக www.chennailibrary.com, www.projectmadurai.org/pmworks.html, www.tamilvu.org/library/libcontnt.htm போன்ற பல தளங்கள் காணப்படுகின்றன. இந்த வகையான இணையத்தள நூலகங்களில் இலவசமாகக் கிடைக்கும் தமிழ் மின்புத்தகங்கள் பெரும்பாலும் PDF File முறையிலும் HTML வகையானகோப்புக்களாகவுமே காணப்படுகின்றன.
அதேவேளை ஆங்கிலமொழி மின் நூல்கள், பலவகையான E-Reader என்று கூறப்படும் இன்னொரு மென்பொருள் கொண்டு மின்நூல்களை வாசிக்கும் முறையை கொண்டிருக்கின்றன. இந்த வாசிப்பு மென்பொருளானது அழகான வடிவத்தை நிறங்களை பின்னணி படங்களை உருவாக்கும் வசதி கொண்டிருப்பதால் அதன் மூலம் நாம் வாசிக்கும் மின் புத்தகத்தின் அழகு மேம்படுகிறது.தமிழ் மின்னூல்களுக்கு இந்தமுறை இருப்பதாக தெரியவில்லை. (யாரவது இருந்தால் சொல்லுங்கோ) எதிர்காலத்தில் நிறைய உருவாகலாம். இப்போது ஆங்கில E-Reader கள் சிலவற்றின் மூலம், தமிழ் மின்நூல்களை நாம் எப்படி அழகுறச் செய்வது என்று பார்ப்போம். இப்படியான நூல்களை நீங்கள் செய்து மற்றவரும் பயன்படும்படி செய்து கொள்ளலாம்.
eReader மென்பொருட்கள் iPhone, iPod touch, BlackBerry, Palm OS, PocketPC, Windows Mobile, Smartphone Symbian போன்றவற்றிலும் பாவிக்கும் வகையில் இருப்பதால் இப்படி உருவாக்கும் தமிழ் மின்புத்தகங்களை இந்த மின் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்போரும் அவற்றில் பதிவு செய்துவைத்து வாசிக்க முடியும். (பரீட்சித்து பார்க்கவில்லை) ஆங்கில வாசிப்பு மென்பொருட்கள் பலவகை உண்டு. இவை இலவசமாகவே கிடைக்கின்றன. உதாரணத்திற்கு eReader, microsoft Lit, Plucker, MobiPokcet, Ebook Maestro, FBReader எனப் பலவகை காணப்படுகின்றன.
முதலில் eReader ல் எப்படி தமிழ் மின்புத்தகம் உருவாக்குவது என்று பார்க்கலாம். eReader இதற்கு தயார் படுத்த வேண்டியது 1) கதை அல்லது ஏதாவது தமிழ் ஆக்கம் 2) eReader Pro for Windows 3) Open office Text document 4) பாமினி எழுத்துரு அல்லது அந்த வகையை சார்ந்த இன்னொரு எழுத்துரு. 5) அவசியமேற்படில் பொங்குதமிழ் உருமாற்றி (www.Suratha.com)
1) முதலில்http://www.ereader.com/ என்ற இணையத்தளத்திலிருந்து வாசிப்புக்கான மென்பொருளை (eReader Pro for Windows) தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.இதை கணனியில் நிறுவி வைத்துக் கொள்ளவும்.
குறிப்பு: இதே இணையத்தளத்தில் அல்லது manybooks.net இல் நிறைய இலவச ஆங்கில மின் புத்தகங்கள் கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்து இந்த reader மூலம்வாசிக்கலாம். ( *.Pdb என்ற வகையிலான மின்நூல்கள் மட்டுமே.)
2) நீங்கள் எழுதிய அல்லது யாராவது நண்பர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆக்கம், கதை, கவிதை போன்றவை, பாமினி வகையை சேர்ந்த எழுத்து முறையால் ஆனதென்றால் (4) வது பகுதிக்கு போங்கள்.
3) unicode முறையிலோ TSCI அல்லது வேறெந்த முறையிலோ இருக்கும் ஆக்கத்தை பாமினி முறைக்கு மாற்ற வேண்டும். இதற்கு இணையத்தில் பொங்கு தமிழ் மூலம் உங்கள் கதையை வெட்டி ஒட்டி பாமினி முறைக்கு மாற்றவும்.( http://www.suratha.com/uni2bam.htm )பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றியிலிருந்து பாமினி உருவிற்கு மாற்றிய கதையினை copy செய்து கொள்ளவும்.
4) Open office text document ஐ திறந்து அதில் பாமினி எழுத்துருவில் உள்ள கதையை Paste செய்யவும். இந்த document ஐ Save as மூலம் Save Type ——– AportisDoc (Palm *.Pdb) வகையைத் தெரிவு செய்து பதிவு செய்து கொள்ளவும். open office தரவிறக்கம் செய்யும் முகவரி http://www.openoffice.org/
இப்போது கதை தயார். eReader ஐ திறந்து அதற்குள் கதையை எடுத்து வைப்பதன் (அல்லது File ————> add Books) மூலம் புதிய வடிவில் கதையை வாசிக்கலாம். எழுத்துக்கள் முதலில் புரியாத வடிவில்காணப்படும். Menu வில் view —-> view setting ல் சென்று bamini எழுத்துருவுக்கு மாற்றிக் கொள்ளவும். இங்கே டிசைன், பாமினி குடும்ப வேறுவகை எழுத்துரு, நிறம் இவைகளை மாற்றி கொள்ளலாம். கீழே உள்ளSave ஐ பயன்படுத்தி பதிந்து வைத்துவிட்டால்மீண்டும் eRaeder ஐ திறக்கும்போது விரும்பிய தெரிவு மாறாமல் இருப்பதைக் காணலாம்.
USB DRIVE இல் பயன்படுத்தவென பயனுள்ள நான்கு மென்பொருட்களைப்பற்றி இங்கு குறிப்பிடுகிறேன்.
1.VIRUS தாக்கத்திலிருந்து உங்கள் USB Drive களை பாதுகாப்பதற்கான மென்பொருள். THUMBS SCREW என்னும் மென்பொருளை பயன்படுத்தி உங்கள் USB இல் வைரஸ் இலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். நீங்கள் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவியதன்(Install) பின்னர் System Tray Icon இல் வலது சொடுக்கின் (Right Click) மூலம் Make USB Writeable என்பதை தெரிவுசெய்து உங்கள் USB ஐ VIRUS இலிருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.
சமூக வலைத்தளமான Facebook புதியதொரு Facebook lite என்னும் இலகுவான பயனாளர் இடைமுகத்தை (User Interface) தனது இணைய பயனாளர்களுக்காக (Facebook's User) வழங்கியுள்ளது. இது twitter க்கு போட்டியான ஒரு வருகை. முன்னைய இயல்புநிலை இடைமுகத்தை(standard Interface) விட அதி வேகமான கொண்டிருக்கிறது (Interface) கொண்டிருக்கின்றது. சிறிது காலத்துக்கு முன்னர் பரீட்சார்த்த (Testing) இணையப்பதிப்பாக இருந்த Facebook Lite தற்பொழுது பொது வெளியீடாக எல்லோரினதும் பாவனைக்கு வந்துள்ளது.
இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் பல பயனுள்ள மென்பொருட்கள் trial ஆகவே உள்ளது. எனவே இதனை சில நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. ஒவ்வொரு முறை நாம் அந்த மென்பொருளை பயன்படுத்த ஆரம்பிக்கும் போதும் அது நம் கணிணியின் தேதியையும் அந்த மென்பொருள் பதியப்பட்ட தேதியையும் ஒப்பிடுகிறது. நமது கணிணியின் தேதி trial தேதிக்குள் இருந்தால் பயன்படுத்த அனுமதிக்கிறது. நமது கணிணியின் தேதியை trial நாளுக்குள் இருக்குமாறு செய்ய Run As Date என்கிற மென்பொருள் பயன்படுகிறது. இதனை Windows 2000, XP, 2003 and Vista ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும்.
நீங்கள் பதியும் மென்பொருளின் தேதியை நினைவு வைத்துக்கொள்ளவும், பின்னர் அதன் trial period முடியும் வரை இதனை சாதாரணமாக பயன்படுத்தலாம். Trial period முடிவதற்கு ஒரு நாள் முன்பு Run As Date மென்பொருளை இயக்கவும். பெரும்பாலான மென்பொருட்களை இதனைக்கொண்டு பயன்படுத்த முடியும்.
நாம் பல ஆன் லைனில் பெறும் கோப்புகள் பெரும்பாலும் rapidshare, megaupload, hotfile போன்ற file sharing தளங்களில் பதிவிறக்கும் வகையிலேயே கிடைக்கின்றன. அவை இலவச பயனர்களுக்கு பதிவிறக்கத்திற்கு மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. எனவே அதிக கோப்புகளை பதிவிறக்க முடிவதில்லை. இதற்கென rapidshare premium link generator தளங்கள் பல இணையத்தில் இலவச சேவையாக premium லிங்க் களை அளிக்கின்றன.
நான் இணையத்தில் தேடியபோது கிடைத்த ஒரு தளம் அனைத்து file sharing premium account களுக்கான premium லிங்கை இலவசமாக அளிக்கிறது.
www.rapid8.com இதன் வழியாக 7 தளங்களின் premium லிங்கை இலவசமாக பெற முடியும்.
இதில் நீங்கள் பதிவிறக்க வேண்டிய கோப்பின் url ஐ கொடுத்து டவுன்லோடை க்ளிக் செய்யவும்.
இதன் மூலமாக ஒரே நேரத்தில் பல கோப்புகளை பதிவிறக்க முடியும் , மேலும் டவுன்லோடு மேனேஜர் மூலம் பல பாகமாக பிரித்து வேகமாகவும் செய்ய முடியம். மேலும் இது resume supported டவுன்லோடிங்கை தருகிறது.
இருவருக்கிடையுள்ளஉறவைகாணும் FLAMES Game பற்றிஅனைவரும்அறிந்திருப்பீர்கள். மன்மதன்படத்தில்இதைப்பற்றிஒருகாட்சிவரும். சிம்புகேம்வைத்துதனகாதலிக்கும்தனக்கும்உள்ளஉறவைகண்டுபிடிப்பதுபோல்காட்சிகள்உண்டு.படம் பார்க்காதவர்களுக்கும் ,FLAMES பற்றி அறியாதவர்களுக்கும் ஒரு சிறு விளக்கம்
FLAMES
F - Friend L - Lover A - Affection M - Marriage E - Enemy S - Sister
1.ஒரு ஆண் மற்றும் பெண் பெயர்களை எடுத்து கொள்க
உதாரணமாகAjith மற்றும் Shalini எடுத்து கொள்வோம்
2. இரண்டு பெயர்களுக்கிடையே உள்ள பொதுவான எழுத்துக்களை நீக்குக
நீக்கிய பின்jt & Slni
3. மிஞ்சிய எழுத்துகளின் எண்ணிக்கையை எடுத்துக்கொள்க
6
4. FLAMES என்ற வார்த்தையை எடுத்து கொண்டு , F லிருந்து ஆரம்பித்து 6 வது எழுத்தை நீக்குக
FLAME
5.மீண்டும் நீக்கிய எழுத்துக்கு அடுத்த எழுத்திலிருந்து மீண்டும் ஆரம்பித்து அதே போல் 6 வது எழுத்தை நீக்குக.இதே போல் ஒரே ஒரு எழுத்து வரும் வரை செய்க
பலவகையான மென்பொருட்களை நமது கணினியில் நிறுவுகிறோம்.அந்த மென்பொருட்களின் சீரியல் எண்ணை குறித்து கொள்ள மறந்து விட வாய்ப்புள்ளது.சில சமயம் அந்த மென்பொருட்களை மீண்டும் நிறுவும் போதோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலோ மென்பொருளின் சாப்ட்வேர் சீரியல் எண் தேவைப்படுகிறது.
கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களின் சீரியல் எண்களையும் தெரிந்து கொள்ள இந்த எளிமையான 75KB அளவுள்ள இலவச மென்பொருள் உதவுகிறது.தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்
வழக்கமாக யூடியுபில் பார்ப்பது போல் அல்லாமல் வித்தியாசமாக பல சிறு சிறு திரைகளில் ஒரு வீடியோவை பார்க்கலாம் இந்த தளம் மூலமாக.கணினி திரை சற்று பெரியதாக இருந்தால் நன்று.சிறு திரைகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.நமக்கு விருப்பமான யூடியுப் வீடியோவின் URL தேர்ந்தெடுத்து இந்த தளத்தில் உள்ளீடு செய்தால் பல திரை வடிவில் காணலாம்.
பலருடைய நோக்கியா கைத்தொலைபேசி புதிதாக வாங்கி சில மாதங்களிலேயே காலை வாரத்தொடங்கிவிடும்.ஆனால் சிலருடையது வாங்கி ஐந்து வருஷம் சென்றாலும் அப்படியே இருக்கும். நீங்கள்பயன்படுத்தும் Nokia கைத்தொலைபேசிஅசலா ? போலியா ? ? எனநீங்கள்சோதித்திருக்கிறீர்களா ? இல்லையெனில்இதோஅருமையானமுறை
உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 02 அல்லது20 ஆக இருந்ததால்உங்களுடையபோன்ஐக்கியஅரபுநாடுகளில்தயாரிக்கப்பட்டதுமிகவும்கூடாதது. விரைவில்பழுதடையும்.
சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 08அல்லது80ஆக இருந்ததாலஉங்களுடையபோன் ஜெர்மனியில்தயாரிக்கப்பட்டது. பரவாயில்லை .
சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம்01அல்லது10ஆக இருந்ததாலஉங்களுடையபோன் பின்லாந்தில்தயாரிக்கப்பட்டது. நல்லது சில வருடங்கள் பாவிக்கலாம்.
உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வாதி இலக்கம் 00 ஆகஇருந்தால்உங்கள்போன்ஒரிஜினல்கம்பனியில்தயாரிக்கப்பட்டது. பலவருடங்கள்பாவிக்கும்.
உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வாதி இலக்கம் 13ஆகஇருந்தால்உங்கள்போன்Azerbaijanஇல்தயாரிக்கப்பட்டது. மிகவும்மோசமானது. உங்களுடையஉடல்நலத்துக்குஆபத்தானது.
உங்களுடையமொபைலின்சீரியல்இலக்கத்தில் 7 வது 8 வாதிஇலக்கம் 03 என்றால் கொரியா ஓகே ரகம்
இனியாவது மொபைல் போன் வாங்கும்போது மேற்கூறிய விடயங்களை கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.