Saturday, April 24, 2010

எல்லா இணையதளங்களிலும் தமிழில் டைப் செய்யலாம்

நீங்கள் வலைப்பக்கத்தில் உலாவரும்  போது எங்கேயாவது தமிழில்
தட்டச்சு (டைப்) செய்ய வேண்டி இருந்தால் கூகுளின் Indic Translate
அல்லது வேறு எதாவது தமிழ் மாற்றிகளை (transilater) கொண்டு
பயன்படுத்துவீர்கள். இப்போது கூகிள் எந்த பக்கத்திலும் தமிழ்
மொழியில் அடிக்குமாறு ஒரு புதிய வசதியை வெளியிட்டுள்ளது. இதனைக்கொண்டு நீங்கள்,

1.facebook ல டைப் செய்யலாம்  

2. Google Search இல் தேடலாம்.
3. தமிழில் உரையாடலாம் (chat )
4.  தமிழில் மின்னஞ்சல் அடிக்கலாம்.
5. இது எந்த வலைப்பக்கத்திலும் இயங்கக்கூடியது.
6. ஆனால் இதை ஏற்கனவே தமிழ் மொழி வசதி உள்ள Orkut, Gmail,
Blogger மற்றும் Knol போன்றவற்றில் பயன்படுத்த தேவையில்லை.

இதை நீங்கள் பயன்படுத்த ஒரு புக்மார்க் செய்ய வேண்டும்.

Internet Explorer பயனர்களுக்கு :

1. [ அ Type in தமிழ் ]
மேலே உள்ள இணைப்பை வலது கிளிக் செய்து Add to Favorites
என்பதை சொடுக்கவும்.


2. பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்று வரும். அதை yes கொடுக்கவும்.
3. பின்னர் Add கொடுத்தால் உங்கள் உலவியின் கருவிப்பட்டைக்கு
கீழே அமர்ந்து விடும்.


இவ்வாறு உட்கார்ந்து இருக்கும்.




Firfox பயனர்களுக்கு :

1. [ அ Type in தமிழ் ]
மேலே உள்ள இணைப்பை வலது கிளிக் செய்து Bookmark this link
என்பதை சொடுக்கவும்.


2. Bookmarks Toolbar இல் சேமிக்கவும்.

பயன்படுத்தும் முறை :

உங்கள் உலவியில் உள்ள [ அ Type in தமிழ் ] இணைப்பை
சொடுக்கினால் கூகுளின் மொழிபெயர்ப்பு வசதி கிடைக்கும்.
வலைப்பக்கத்தில் உள்ள எந்த உரைப்பெட்டியிலும் என்ற குறியீடு இருக்கும்.நீங்கள் Ctrl+G அழுத்தி ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிக்கு மாறிக்கொள்ளலாம்.



மீண்டும் வேண்டாம் என்றால் கருவிப்பட்டையில் உள்ள அதே
இணைப்பை சொடுக்கினால் வசதி மறைந்துவிடும்.

மேலும் மற்ற உலவிகளில் சேர்ப்பதைப் பற்றியும் மற்ற
மொழிகளின் இணைப்பு வேண்டுமெனில் இதைப்பார்க்க.
http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_ta.html

நன்றி பொன்மலர் பக்கம்

Wednesday, April 21, 2010

லப்டப்களை (Lap top) உபயோகபடுத்த கூடிய மற்று வழிகள்

முட்டை பொரிக்க

 
டேபிள் டெனிஸ் விளையாட

போகும் இடங்களில் கதிரை கிடைக்க விட்டால் லப்டப்களை பயன் படுத்தி  அமர 

கட்டராக 

நுளம்பு / கொசுக்களை அடிக்க

படிக்கும் போது டேபிள் லைட் ஆகா

தரையை கூட்டி அள்ள

எலி பொறியாக

sign போர்ட்டாக

பாதுகாப்புக்கு

வைப்பர் ஆக பயன்படுத்தலாம் 

செல்ல பிராணிகளின் வளப்பிடமகா 

கூகிள் நிறுவனம் பற்றி

கூகிள் என்பது அமெரிக்காவிலுள்ள ஓர் நிறுவனம். இதுவே கூகிள் தேடுபொறியைப் பராமரித்து வருகின்றது. இந்நிறுவனத்தில் ஏறத்தாழ 5,700 பேர்வரை பணிபுரிகின்றனர்.


கூகிள் சேவைகள் யாவும் வழங்கிப் பண்ணைகளிலேயே en:Server farm இயங்குகின்றன. இவை மலிவான ஆயிரக்கணக்கான கணினிகளில் சற்றே பளு குறைக்கப் பட்ட லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்குகின்றன. இந்த நிறுவனமானது கணினிகளின் எண்ணிக்கை பற்றி எதுவும் கூறாத போதும் 2005ஆம் ஆண்டில் 100, 000 லினக்ஸ் கணினிகள் மூலம் இயங்குவதாக மதிப்பிடப் பட்டுள்ளது.


கூகிள் நிறுவனம் கூகிள் தேடுபொறியைப் போல தற்போது பிளாக்கிள்(Blackle) என்னும் தேடுபொறியை வெளியிட்டுள்ளது.கூகிள் தேடுபொறிக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் பிளாக்கிளில் பிண்ணனி கருப்பு நிறத்தில் இருக்கும்.இதன் மூலம் மின்சாரம் சேமிக்கப் படுகிறது.அந்த தளத்தில் நுழையும் போதே,அதன் மூலம் இதுவரை சேமிக்கப்பட்ட மின்சாரத்தின் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். தள முகவரி- www.blackle.com


கூகிள் ஒரு பிரபல்யமான தேடுபொறியாகும். இதன் வரலாறு இங்கு கட்டுரை மூலமாக உள்ளடக்கப்படுகின்றது.


கூகிள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ்(Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin) என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக(Ph.D.) கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு) முடிவில் தோன்றியதாகும். ஆரம்பத்தில் லாரி பேஜின் ஆராய்ச்சிக்கான விடயமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். 

இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய தேடுபொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர். இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி தேடுபொறியில் தேடப்படும் விடயம் எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து தேடுபதிலாக பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர்.

இது அப்போது பாவனையில் இருந்த தேடுபொறி தனது தேடும் விடயத்தை எந்த இணையப் பக்கம் அதிகம் கொண்டிருந்ததோ அதன் எண்ணிக்கை வரிசையில் (இறங்கு முகமான வரிசை) பதிலாக (கணினியின் திரையில்) கொடுத்ததை விட, தமது தேடுகருகியானது தேடிய விடையத்தின் பக்கங்களை அலசி தேடுபதிலாக வழங்கும் முறை சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் தமது ஆராய்ச்சிக்கு புனைபெயராக பாக்ரப்("BackRub") (பின்னால் தடவு அல்லது வருடு) என்ற பெயரை சூட்டியிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின்புல (backlinks) இணைப்புகளுடன் முக்கிய பங்குவகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிடனர். இவர்கள் ஆய்வை மிகவும் ஒத்த விதத்தில் தேடு பதிலாலை கொடுப்பத்ற்கு அந்த காலகட்டத்தில் சிறிய தேடு பொறி ராங்டெக்ஸ்(RankDex) வேலைத் திட்டத்தில் இறங்கியும் இருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.

தேடப்படும் விடையம் அடங்கிய இணையப் பக்கங்களினால் அதிகம் எந்த ஒரு இணையப் பக்கம் இணைக்கப் படுகின்றதோ அதுவே தேடப்படும் விடயத்தின் தொடர்பான பதில் என தமது ஆராச்சியை நியாயப்படுத்தினர். இந்த ஆராச்சி ஸ்ரான்பேஃர்ட் பல்கலைக்களக பட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராச்சி என்பதால் தமது விதிகளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு கூகிள் தோன்றவும் அடிகோலினர். 

ஆரம்பத்தில் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்காக google.stanford.edu என்ற பெயர் பாவிக்கப்பட்ட போதிலும் பின்னர் கூகிள்.கொம் (google.com) என 1997ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 செப்ரம்பர் 15ம் நாள் கூகிள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது. 1998 செப்ரம்பர் 7இல் நண்பர் ஒருவரின் கார்த் தரிப்பிட கொட்டகையில் கூகிள் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலிடுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1 மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர்.

மேலும், இவர்கள் ஆரம்பத்தில் மிக தீவிரமாக கூகோல்.கொம் (googol.com)என பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். கூகோல் என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும். ஆனால், அது சிலிக்கன் பள்ளத்தாக்கு (Silicon Valley) பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்தபோது பிறந்ததே "கூகிள்" என்ற புதிய சொல். கார் கொட்டகையில் இருந்து இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் 1999ம் மார்ச் மாதம் சிலிக்கன் பள்ளத்தாக்கிற்கு மாற்றலாகின. 

அங்கு வெவ்வேறு இரு இடங்களில் "கூகிள்" இயங்கிய போதிலும் விரைவான வருவாய்,வளர்ச்சி காரணமாக பெரிய கட்டிட தொகுதிக்கு வாடகை அடிப்படையில் 2003இல் மாற்றலாயிற்று. அன்றிலிருந்து அதே இடத்திலேயே இருப்பதுடன் அக் கட்டிடத் தொகுதி கூகிள்பிளெக்ஸ் (googolplex) எனவும் பெயர் பெற்றது. பின்பு 2006 இல் 319 மில்லியன் டொலர்களை கொடுத்து அந்த கட்டிடத்தொகுதியை கூகிள் கொள்முதல் செய்தும் கொண்டது.


கூகிள் தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக்கும் இணைய பாவனையாளர்களுடன் புதிது புதிதாகவும் பலரையும் கவரத் தொடங்கியது. தேடுபொறியில் தேடப்படும் சொற்களுடன் தொடர்பான விளம்பரங்களை 2000ம் ஆண்டில் இருந்து கூகிள் சேர்க்கத் தொடங்கியதோடு விளம்பரங்கள் இணைப் பக்கங்களின் அமைப்பை குலைக்காமலும், இணைப் பக்கங்கள் கணனி திரைகளில் விரைவாக தோன்று வதற்காகவும் ஆரம்பத்தில் எழுத்துருக்களில் மட்டும் வடிவமைக்கப் பட்டிருந்தன. தேடுபொறியில் தேடலை ஒத்த விளம்பரங்கள் கேள்வி மூலமாக அல்லது சொடுக்கப்படும் விகிதத்திலும் விற்கப்படுவதுடன் இவற்றின் ஆரம்ப விலை 0.05 டொலராகவும் உள்ளது. இந்த தேடு விடையத்தை ஒத்த விளம்பரத்தினை இணையத் தளங்களில் காண்பிக்கும் நுட்பமானது Goto.com என்ற நிறுவனமே முன்னோடிகளாக இருந்தார்கள். 

கோட்டு.கொம் என்ற இதன் பெயர் "ஒவேச்சர் சேர்விசஸ்" (Overture Services) ஆகவும் பின்நாளில் யாகூ! இனால் கொள்முதல் செய்யப்பட்டு "யாகூ சேர்ச் மாக்கெற்றிங்" (Yahoo! Search Marketing) ஆயிற்று. கூகிளுடன் போட்டி ஆகி இருந்த பல புதிய நிறுவனங்களும் இணையத்தள சந்தையில் தோற்று விட "கூகிள்" லாபமீட்டுவதுடன் உறுதியாக வெற்றியீட்டி வருகிறது.


ஆரம்பத்தில் "கூகோல்" (googol) என்பது அதன் அர்த்தம் கண்டு விரும்பப் பட்ட போதிலும் எழுத்துப் பிழைகளுடனான "கூகிள்" என்பது மிக பிரபலம் ஆயிற்று. இன்று பெரும்பாலும் ஒவ்வொரு மொழியிலும் அதிகம் பேசப்படும் வினைச் சொல்லாக மாறி விட்ட இதை ஒக்ஸ்ஃபோர்ட் அகராதி 2006இல் சேர்த்ததுடன் அதனை 'கூகிள் தேடுபொறி இணையத்தில் தகவல் பெற பாவிக்கப்படுகின்றது' என அர்த்தப் படுத்தியும் உள்ளது. கூகிள் தேடுபொறி தேடுதலுக்கான பட்டியலிடும் தொழில் நுட்பமானது 2001ம் செப்ரம்பர் 4ம் திகதி காப்புரிமம் செய்யப் பட்டதுடன் ஸ்ரான்ஃபோர்ட் பல்கலைக்கழக அதிகாரபூர்வ கண்டுபிடிப்பாளர் காப்புரிமத்திலும் பட்டியலிடப் பட்டுள்ளது.


நன்றி விக்கிபீடியா

Tuesday, April 20, 2010

கூகிள் டாக்

கூகிள் டாக் 
Google Talk என்பது இணைய உரையாடல் மற்றும் இணையமூடான ஒலியழைப்புக்களை ஏற்படுத்தும் ஒரு கூகிளின் சேவையாகும். கூகிள் டாக் 24 ஆகஸ்ட் 2005 முதல் வெள்ளேட்டத்திலுள்ளது. வேறு சில இணைய உரையாடல் மென்பொருட்களைப் போன்றல்லாது கூகிள் டாக் துதுவன் திறந்த XMPP protocol ஐப் பாவிப்பதோடு வேறு இணைய உரையாடல் மென்பொருட்களையும் கூகிள் டாக் உடன் இணைவதையே கூகிள் விரும்புகின்றது.





இதனை வெளியிட்ட தினத்தில் இருந்து கூகிள் டாக் மென்பொருள் விண்டோஸ் 2000, விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் 2003 சேவர் இயங்குதளத்தில் மாத்திரமே கிடைக்கின்றது. ஏனைய இயங்குதளங்களில் உள்ளவர்கள் ஜபர்'கெயிம் போன்ற இணைய உரையாடல்கூகிள் ஜிங்கிள் என்ற பெயருடன் இணையமூடான ஒலி அழைப்புக்களை வெளியிட்டுள்ளனர். மென்பொருட்களிற்கூடாக இணைந்துகொள்ளலாம் (மேலே குறிப்பிட்ட இயங்குதளங்கள் உட்பட). எனினும் இணையமூடான ஒலி அழைப்புக்கள் கூகிள் டாக்கில் மாத்திரமே வேலை செய்யும். தொழில்நுட்பத்தினூடாக


வரலாறு

23 ஆகஸ்ட் 2005 ஆப்பிள் X கணினியூடான ஜபர்இணைய உரையாடல்ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் நுழைந்தவர்களிற்கு கூகிள் டாக் இணைய உரையாடல்மின்னஞ்சலூடாகக் வரும் சில வாரங்களில் கிடைக்கும் என்றனர். இவ்வாறு ஜிமெயில்மின்னஞ்சலூடாக உரையாடலில் ஈடுபடுவது கூகிள் டாக் பாவனையாளர்களை அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. சேவையா முன்மொழியப் பட்டிருந்தது. கூகிளின் போர்ட் (Port) 5222 இச்சேவையில் இணையமுடியும். 7 பெப்ரவரி 2006 இல் இருந்து சேவை தொழில்நுட்பத்திலமைந்த

தொழில் நுட்பத் தகவல்கள்
ஒத்தியங்கும் தன்மையே கூகிள் டாக்கின் பலம் என கூகிள் கூறியுள்ளது. கூகிள் டாக் ஜபர் மற்றும் XMPP தற்போதுள்ள் செய்திகளைப் பரிமாறவும் உதவியது. 17 ஜனவரி 2006 இலிருந்து கூகிள் சேவரிலிருது சேவருக்கான எந்தவொரு மீண்டும் அழைக்கும் (dialback protocol) ஜபர் தொழில் நுட்பமுள்ள் சேவரை ஆதரிக்கத் தொடங்கியது.
கூகிள் டாக் உரையாடல்கள் யாவும் தானாகவே ஜிமெயில் மின்னஞ்சலில் ஓர் கோப்புறைக்குள் சேமிக்கப் படும். இந்நடைமுறையானது ஓரிடத்தில் உரையாடல்களைச் சேமிப்பதால் தேடல்களை இலகுவாக்குவதோடு எந்தக் கணினியில் சேமித்தோம் என்ற பிரச்சினையும் கிடையாது.




நன்றி விக்கிபீடியா

Monday, April 19, 2010

பேஸ் புக்கில் ஒசாமாவின் பெயரை நீக்கிவிட முடிவு

ஒசாமா பின்லேடன் பெயரில் பதிவு செய்யும் நபர்கள் எந்த வகையில் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு உள்ளவர்கள் என்ற விவரத்தை எங்களால் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஒசாமா பின்லேடன் பெயரில் பதிவு வந்தால் அதனை முழுமையாக நீக்கிட முடிவு செய்திருக்கிறோம் என்று பேஸ் புக் நிறுவன செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ நாய்ஸ் தெரிவித்தார்.




உலக அளவில் பிரபலம் அடைந்து வரும் பேஸ்புக்கில் சேர்க்கப்பட்டிருந்த பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பதிவை நீக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது குறித்துக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்டர்நெட் உலகில் அபார வளர்ச்சி அடைந்து வரும் பேக்ஸ்புக்கில் நாள்தோறும் பலர் தங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதன் மூலம், தங்களை இதில் சேர்த்துக் கொண்டவர்கள் தங்களது நண்பர்கள் வட்டாரங்களைப் பெருக்கி கொள்ளவும், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் பெரும் உதவியாக இருக்கிறது.

இந்நிலையில் ஒசாமா பின்லேடன் பெயரிலான பேஸ்புக்கில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆதரவாக சேர்ந்துள்ளனர். பலர் தங்களது மத ரீதியான கோட்பாடு மற்றும் பயங்கரவாதத்தைத் தூண்டும் வாசகங்கள் பதிவு செய்திருக்கின்றனர்.

பிரின்ஸ் ஒப் முஜாகிதீன் என்றும் ஒசாமாவை வர்ணித்துள்ளனர். இவர் மலை பகுதியில்தான் பதுங்கி இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. அல்-கொய்தா மற்றும் அல்சகாப் பயங்கரவாத அமைப்பின் கோட்பாடுகளும் இதில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆடியோ கேசட்டுகளும் இருக்கின்றன.

இதனை அறிந்த பேஸ்புக் நிறுவனம் இந்தப் பதிவை அழிக்க முடிவு செய்துள்ளனர்.

ஆண்ட்ரூ நாய்ஸ் இது குறித்து மேலும் கூறுகையில்,

"பேஸ்புக்கில் மக்கள் சிலர் போலியான பெயர்களைப் பதிவு செய்கின்றனர். இவர்கள் புகழ்பெற்ற அல்லது வேறு மாற்று நபர்கள் பெயரிலோ பதிவு செய்கின்றனர்.

ஒசாமா பின்லேடன் பெயரில் பதிவு செய்யும் நபர்கள் எந்த வகையில் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு உள்ளவர்கள் என்ற விவரத்தை எங்களால் உறுதியாக சொல்ல முடியவில்லை.

இருந்தாலும் ஒசாமா பின்லாடன் பெயரில் பதிவு வந்தால் அதனை முழுமையாக நீக்கிட முடிவு செய்திருக்கிறோம்" என்றார்.

Sunday, April 4, 2010

புளோகர்/Blogger


புளோகர்/Blogger 

ஓர் வலைப்பதிவு வெளியீடு அமைப்பாகும்.இதனை முதலில் பைரா லாப்ஸ் என்ற நிறுவனம் 1999ஆம் ஆண்டு உருவாக்கியது. பின்னர் 2003ஆம்ஆண்டில் கூகிள்/Google நிறுவனம் இவ்வமைப்பை வாங்கியது.இங்கு சொந்த வலைத்தளங்கள் இல்லாத வலைப்பதிவர்கள் இவ்வமைப்பில் இணைந்து கொண்டு blogspot.com என்ற துணைபரப்பில் இந்நிறுவன வழங்கியில் இருந்து வெளியிடுகிறார்கள். இந்த சேவையை கூகிள்/Google இலவசமாக வழங்குகிறது.




ஓர் வலைப்பதிவை உருவாக்க வேண்டிய மென்பொருள்கள்,சேமிக்க வேண்டிய சேமிப்பகங்கள் மற்றும் இணையத்தில் வெளியிட வேண்டிய வழங்கி மற்றும் ஆள்களபெயர் என அனைத்தையும் பயனர் அறியாவண்ணம் அமைத்துக் கொடுப்பதால், ஓர் வலைப்பதிவருக்கு கணினி/இணைய அறிவு அடிப்படை அளவில் இருப்பினும் போதுமானதாக ஆக்கியது இதன் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. இச்சேவை இணையத்தில் பல வசதிகளை கொடுத்து வலைப்பதிவுகளை பரவலாக்கியது. 2007ஆம் ஆண்டு இருமுறையல்லாத கூடுதல் வருகையாளர்களைக் கொண்ட இணைய பரப்புகளை கணக்கெடுத்ததில் புளோகர் சேவை பதினாறாவதாக வந்துள்ளது


உருவாக்குங்கள் உங்கள் சொந்த ப்ளாக் 

Saturday, April 3, 2010

Tweeter/ட்விட்டர்

ட்விட்டர் (Tweeter) ஒரு இலவச சமூக வலையமைப்பு மற்றும் மைக்ரோ-வலைப்பதிவிடல்சேவை ஆகும், இது தனது பயனாளர்களுக்கு ட்வீட்ஸ் (tweets) எனப்படும் செய்திகளை அனுப்பும் மற்றும் பெறும் வசதிகளை அளிக்கிறது. ட்வீட்ஸ் என்பது 140 எழுத்துருக்கள் வரையிலான வெளியீடுகளை உரிமையாளரின் சுயவிவரப் பக்கத்தில் காண்பிக்கும் 

மற்றும் பின்தொடர்பவர்கள் எனப்படும் உரிமையாளரைத் தொடர்பவர்களுக்கு அனுப்பும் உரை-அடிப்படையான இடுகைகள் ஆகும். அனுப்புபவர்கள் தங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் அனுப்புவதைக் கட்டுப்படுத்தலாம் அல்லது இயல்பிலேயே திறந்த நிலை அணுகலுக்கு அனுமதிக்கலாம். பயனர்கள் ட்விட்டர் வலைத்தள சிறிய செய்திச் சேவை (SMS) அல்லது வெளிப்புற பயன்பாடுகள் வழியாக ட்வீட்ஸ்களை அனுப்பவும் பெறவும் முடியும். இந்த சேவையை இதில் 

பயன்படுத்துவதற்குக் கட்டணம் ஏதுமில்லை, ஆனால் அதை SMS வழியாக அணுகினால் தொலைபேசி சேவை வழங்குநர்கட்டணம் வசூலிக்கலாம்.


SMS செய்தியனுப்புதலில் வசதிக்காக செய்தியின் நீளத்தை ஆரம்பத்தில் 140 எழுத்துரு வரம்பை உடையதாக அமைத்திருந்தனர், பின்னர் சுருக்கெழுத்துகுறிமுறை வகை மற்றும் SMS செய்திகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் வழக்குபோன்றவை இணையத்திற்கு கொண்டுவரப்பட்டன. 140 எழுத்துரு எல்லை, tinyurl, bit.ly மற்றும் tr.im போன்றURL குறுக்கல் சேவைகள் பயன்பாட்டை விரைவாக செயல்படச் செய்யும், மேலும் ட்விட்பிக் மற்றும் நோட்பப் போன்ற உள்ளடக்க ஹோஸ்டிங் சேவைகள், மல்டிமீடியாஉள்ளடக்கத்தைப் பயன்படுத்தும் வசதி மற்றும் 140 எழுத்துருக்களுக்கு மேற்பட்ட எழுத்துக்களைப் பயன்படுத்தும் வசதி போன்றவற்றை அளிக்கும்.


2006 இல் ஜேக் டோர்சே என்பவரால் ட்விட்டர் உருவாக்கப்பட்டதிலிருந்து, இது உலகளாவிய அளவில் குறிப்பிடும்படியாகவும் பிரபலமாகவும் இருக்கிறது. ட்விட்டரின் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தைப் பயன்படுத்தி மற்ற பயன்பாடுகளால் குறுஞ்செய்திகளை அனுப்பவும் பெறவும் முடிவதால் பெரும்பாலும் ட்விட்டரின் நேரடிப் பயன்பாடு மறைக்கப்படுகிறது எனினும் இது சில நேரங்களில் "இணையத்தின் SMS" என விவரிக்கப்படுகிறது.


அலெக்சாவின் வலைப் போக்குவரத்து நெரிசல் ஆய்வின்படி, மிகவும் பிரபலமான உலகளாவிய 50 வலைத்தளங்கள் பட்டியலின் தரவரிசையில் ட்விட்டரும் ஒன்றாக இருக்கிறது. எனினும் அந்த நிறுவனம் இயக்கத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் பட்டியலை வெளியிடாததால், தினசரி பயனர்களின் எண்ணிக்கைகளின் மதிப்பீடு வேறுபடுகிறது, பிப்ரவரி 2009 இல் Compete.com வலைப்பதிவு தரவரிசையில், மாதம் 6 மில்லியன் தனிப்பட்ட பார்வையாளர்களும், மாதம் 55 மில்லியன் பார்வையாளர்களும் ட்விட்டரைப் பார்வையிடுகின்றனர் என்ற அவர்களது எண்ணிக்கையின் அடிப்படையில், மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலையலைப்பு தரவரிசையில் ட்விட்டர் மூன்றாவது இடம்பிடித்துள்ளது. மார்ச் 2009 இல், Nielsen.com வலைப்பதிவு தரவரிசையில் பிப்ரவரி 2009 இன் படி உறுப்பினர் சமூகப் பிரிவில் ட்விட்டர் மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் வலைத்தளம் என்ற தரத்தைப் பெற்றது. ட்விட்டரின் மாத வளர்ச்சி 1,382 

சதவீதமும், ஜிம்பியோ 240 சதவீதமும், அதனைத் தொடர்ந்து பேஸ்புக் 228 சதவீதமும் அதிகரித்தது.எனினும், 40 சதவீத ட்விட்டரின் பயர்கள் மட்டுமே தொடர்ந்து அதனை உபயோகிக்கிறார்கள்

Friday, April 2, 2010

Facebook / ஃபேஸ்புக்



பேஸ்புக் 
[Facebook] 2004இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு  நிறுவனமாகும்(social network). ஹார்வர்ட்பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் மார்க் சக்கர்பர்க் ஹார்வர்ட் மாணவர்களுக்கு ஆரம்பித்து பின்பு வேறு ஐவி லீக்பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அனுமதி கிடைத்தது. இன்றைய ஃபேஸ்புக்கில் 13 வயதான நபர்கள் சேரலாம்.அலெக்சா நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இணைய முழுவதிலும் ஃபேஸ்புக் தான் ஐந்தாம் மிகப் பரவலமான இணையத்தளமாகும்.தமிழ் உட்பட உலகமொழிகள் பலவற்றில் பேஸ்புக்கில் வலம் வரலாம்.


உங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறதா? அதில் இணைய வசதி செய்யப்பட்டு இருக்கிறதா? வயதுக்கு வந்த பிள்ளைகள் உங்க ளுக்கு இருக்கிறார்களா? அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... அவர்கள் நிச்சயம் 'ஃபேஸ்புக்' பயன்படுத்துபவராக இருப்பார்கள். அந்த அளவுக்கு இந்த 'சோஷியல் நெட்வொர்க்கிங்' இணைய தளம் இளைஞர்களிடையே பிரபல மாகி வருகிறது. இளைஞர்கள் மட்டுமல்ல... அனைத்துத் தரப்பினரும் இதன் உறுப்பினர் களாக இருக்கிறார்கள். இந்தியாவில் மொபைல் போன் பயன்பாட்டுக்கு அடுத்தபடியாக வெகுவேகமாகப் பரவி வரும் விஷயம் இந்த ஃபேஸ்புக் தான்!

டைப் அடிக்கத் தெரியாத முதியவர்களும் இன்று கணினியைப் பயன்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். நமது நாட்டின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, கணினிப் பயன்பாட்டை அதிகரித்துக்கொண்டே போகிறது. மொபைல் போன் அளவுக்கு கணினிப் பயன்பாடு

இல்லையென்றபோதிலும் ஒப்பீட்டளவில் இதன் வளர்ச்சி அபாரமானதாகவே இருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள இளைஞர் களும்கூட மின்னஞ்சல் முகவரி ஒன்று வைத்திருக்க வேண்டும் என்பது இன்றைய எதார்த்தமாக மாறியுள்ளது. வேலைக்காக விண்ணப்பிக்கின்ற எவரும் தன்னுடைய பயோடேட்டாவில் இப்போது அஞ்சல் முகவரியோடு மின்னஞ்சலையும், மொபைல் போன் எண்ணையும் தவறாமல் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.

கணினி என்றாலே அது இண்டர் நெட்டுடன் இணைந்த ஒன்றுதான் என்று ஆகிவிட்டது. அலுவலகங்களில் உள்ள கணினிகளும் இன்று இணையத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. இணையப் பயன் பாட்டின் உபவிளைவுதான் ஃபேஸ்புக் போன்ற 'சோஷியல் நெட்வொர்க்கிங்' இணைய தளங்களின் பெருக்கம். 'மை ஸ்பேஸ்,' 'ஆர்குட்' என இப்படியான இணையதளங்கள் பல இருந்தாலும் ஃபேஸ்புக்தான் இன்று எல்லாவற்றிலும் முதலிடம் பிடித்திருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 40 கோடி பேர் இதைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால் 2009-ம் ஆண்டு இறுதி யில் இதைப் பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை சுமார் 80 லட்சமாக இருந்தது.

வரலாறு

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக். தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஐடியா அவருக்கு வந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது. அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம்.

 இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணைய தளம் ஒன்றை அவர் உருவாக்கினார். முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிறகு மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இப்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பி னராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.

காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணைய தளம், இப்போது அவனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது. அது நம் காலத்தின் (காதலின்?) அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஆறே வருடங்களில் இந்த பிரமாண்ட அதிசயம் நடந்திருக்கிறது. இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன. வணிகரீதியில் மதிப்பு வாய்ந்த எம்.டி.வி. நிறுவனத்துக்கு இணையாக வாங்குவதற்கு போட்டி போடப்படும் கம்பெனிகளில் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009-ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன் பிருந்தே இவ்வளவு போட்டி!

மக்கள் ஏன் விரும்புகிறார்கள்?

ஃபேஸ்புக் போன்ற சோஷி யல் நெட்வொர்கிங் தளங்களை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? மனித உறவுகள் பலவீனம் அடைந்து வரும் இன்றைய உலகில் மனிதர்கள் தீவுகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். பழைய காலத்தைப்போல குடும்பம் என்பது வலுவான அமைப்பாக இப்போது இல்லை. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதனால், தனித்து விடப்பட்ட மனிதர்கள் உறவுகளைத் தேடி அலைகிறார்கள். உறவின் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல், பயன்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற நவீன மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான் இத்தகைய இணைய தளங்கள். இவற்றில் நீங்கள் உங்களது உணர்வுகளை நினைத்த நேரத்தில், நினைத்த விதமாக வெளிப்படுத்தலாம். புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளலாம். அவர்களோடு அரட்டை அடிக்கலாம், ஆவேசப்படலாம். புகைப் படங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

'எனக்கு இன்று மனசு சரியில்லை' என்று ஒரு செய்தியை இதில் போட்டால் போதும்... குறைந்தது 10 நண்பர்களிடம் இருந்தாவது உங்களுக்கு ஆறுதல் செய்தி வந்துவிடும். நமது பிறந்த நாளை நாமே மறந்துவிட்டாலும்கூட அதை நினைவில் வைத்திருந்து வாழ்த்து சொல்கிற நண்பர்களை ஃபேஸ்புக்கில் பார்க்கலாம்.

மனிதர்களுக்குப் பணம் மட்டுமே எல்லா மகிழ்ச்சியையும் கொடுத்து விடுவதில்லை. ஒரு மனிதனின் ஆளுமையை வடிவமைப் பதில் 'சமூக மூலதனம்' எனச் சொல்லப்படுகிற சமூக உறவுகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பணத்தை சம்பாதிக்க பல்வேறு வழிகளைக் கண்டறிந்துள்ள மனிதன், ஒரு பக்கம் அந்த மூலதனத்தை குவித்துக்கொண்டு இன்னொரு பக்கம் சமூக மூலதனத்தை இழந்து கொண்டிருக் கிறான். அதை சரி செய்து கொள்வதற்கு அவனுக்குக் கிடைத் துள்ள வாய்ப்பு என் றும் இத்தகைய இணைய தளங்களைச் சொல்லலாம். கூட்டுச் செயல்பாட்டி லிருந்து விலகிப்போய்விட்ட மனிதன் தனக்கென ஒரு சமூகக் குழுவை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். அந்த விருப்பத்தை இத்தகைய இணைய தளங்கள் நிறைவு செய்கின்றன. தனிப்பட்ட பிரச்னைகளை மட்டுமின்றி, சமூகப் பிரச்னைகளையும் இத்தகைய தளங்களில் பகிர்ந்துகொள்ள முடிகிறது.

நான் ஃபேஸ்புக்கில் உறுப்பினரானவுடன் தமிழ கத்தைக் குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பது பற்றிப் பிரசாரம் ஒன்றை அதன்மூலம் மேற்கொண்டேன். அதற்காக குழு ஒன்றை அதில் அமைத்தேன். சென்னை குப்பங்கள் பற்றி ஆய்வுசெய்த அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் தன்னிட மிருந்த புள்ளிவிவரங்களை அதன்மூலம் எனக்கு அனுப்பிவைத்தார். அந்தப் பிரசாரத்தைப் பார்த்த சில பத்திரிகையாள நண்பர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அதுகுறித்து கட்டுரைகளையும் பேட்டிகளையும் வெளி யிட்டனர். அந்த உற்சாகத்தில்தான் சட்டப்பேரவையில் தொடர்ந்து அந்த விஷயத்தை நான் வலியுறுத்தினேன். இன்று அந்தக் கனவுத் திட்டம் நனவாகிவிட்டது.
ஃபேஸ்புக் என்பது பல்வேறு நிகழ்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கும் பயன்படுகிறது. அதன்மூலம் எளிதில் உங்கள் நண்பர்களை ஒரு நிகழ்வுக்கு அழைத்துவிடலாம். தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் பலர் தங்களது திரைப்படங்கள் பற்றிய செய்திகளை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு விளம்பரப் படுத்தி வருகிறார்கள். தாங்கள் படிக்கும் நல்ல பல கட்டுரைகளை மற்ற நண்பர்களின் பார்வைக்காக ஃபேஸ்புக்கில் போடுவது இப்போது அதிகரித்துவருகிறது. அதற்கேற்ப பத்திரிகைகள் தங்களது இணைய தளங்களை வடிவமைத்துவருகின்றன. ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள் இப்போது ஏதேனும் ஓர் இடத்தில் கூடிக் குறிப்பிட்ட பிரச்னைகள் பற்றி விவாதிக்கிறார்கள். இப்படியான சந்திப்புகள் இளம் தொழில் முனைவோருக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன.

இந்தியாவில் கணினிப் பயன்பாடு இன்னும் பெருமள வில் வளர்ச்சி அடையவில்லை என்றபோதிலும் மொபைல் போன்களின் பெருக்கம் ஃபேஸ்புக் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. இப்போது, சுமார் 30 கோடி மொபைல் போன்கள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கை 2011-ம் ஆண்டின் இறுதியில் 60 கோடி யாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் வெறும் 10 சதவிகிதம் பேர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினால்கூட சுமார் ஆறு கோடி வந்து விடும். தற்போது உலகெங்கும் உள்ள ஃபேஸ்புக் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இது கணிசமான அளவாக இருக்கும். எல்லாவற்றையும் கூட்டமாகச் செய்தே பழகிப்போன இந்திய மனோபாவத்துக்கு ஃபேஸ்புக் மிகவும் பொருத்தமாயிருப்பதால், மற்ற நாடுகளையெல்லாம் வீழ்த்திவிட்டு இந்தியர்கள் இதை ஆக்கிரமிக்கப்போவது நிச்சயம். இதை உணர்ந் திருப்பதால்தானோ என்னவோ... இந்தியாவைத் தனது முக்கியமான இலக்காக ஃபேஸ்புக் நிறுவனம் கருதுகிறது. இப்போது ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய ஆறு மொழிகளில் ஃபேஸ்புக்கில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். விரைவில் இன்னும் பல இந்திய மொழிகளில் இந்த வசதியை வழங்கப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த இலக்கை எட்டுவதற்காக ஹைதராபாத்தில் அலுவலகம் ஒன்றைத் திறக்கவிருப்பதாகவும் அந்நிறுவனம் கூறி யுள்ளது. ஆசிய நாடுகளிலேயே ஃபேஸ்புக்கின் அலுவலகம் திறக்கப்படுவது ஹைதராபாத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் போன்ற தளங்களால் நன்மைகள் மட்டுமின்றி, தொந்தரவுகளும் உண்டு என்பதை மறுப்ப தற்கில்லை. ஃபேஸ்புக்கில் நாம் பகிர்ந்துகொள்கிற விவரங்களை யார் யார் பார்க்கலாம் எனநாமே வரையறுத்துக்கொள்கிற வசதி இருக்கிறது, நம்மு டைய 'ப்ரைவஸி' பாதுகாக்கப்படுகிறது என சொல்லப்பட்டாலும் நாம் அதில் வெளிப்படுத்துகிற விவரங்களை மற்றவர்கள் துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமின்றி, ஃபேஸ்புக்கிலிருந்து நாம் விலகிவிட்டாலும் நாம் வெளியிட்ட தகவல்கள் இணையத்தில் இருந்துகொண்டுதான்இருக்கும். அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் எளிதான வையாக இல்லை. ஆனால், இத்தகைய குறைபாடுகள் ஃபேஸ்புக்கின் பயன்பாட்டை எந்த விதத்திலும் குறைத்துவிடவில்லை. 'அதனால் ஆபத்து... இதனால் தொந்தரவு!' என்று பேசி நம்மை நாமே முடக்கிக் கொள்வதைவிட தொழில்நுட்பம் தரும் அனுகூலங் களையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதே புத்திசாலித் தனம்.




நன்றி விகிபிடியா
Related Posts Plugin for WordPress, Blogger...