Tuesday, September 29, 2009

மந்திரம் இல்லை மாயம் இல்லை


மந்திரம் இல்லை மாயம் இல்லை சுத்த மான மாஜிக் ட்ரை பண்ணுங்க

Friday, September 25, 2009

இன்று எனது பிறந்த நாள்


இன்று எனது பிறந்த நாள் ஒட்டி புதிய வலைப்பூ ஒன்று ஆரம்பித்து இருக்கிறேன்
உங்களது வரைவளைப்பை எதிர் பாக்கிறேன்

Wednesday, September 23, 2009

இணையத்தில் தமிழ் மின்னூல்கள்


இணையத்தில் இப்போது கணனியில் வாசிப்பதற்கான மின்புத்தகங்கள்(EBooks) தாராளமாகவே கிடைக்கின்றன. கடைத்தெரு, நூல் நிலையம் என்று நடந்து சென்று நல்ல புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று அலைந்து திரிந்து களைத்துப் போய்விடாமல் வீட்டில் இருந்தபடியே கணனி மவுஸ் பட்டனை அழுத்தி விரும்பிய புத்தகங்களை தெரிவு செய்து படிக்கும் முறை நன்றாகத்தான் இருக்கிறது.
அதைத்தவிர இணையத் தளங்களிலிருந்து இலவசமாகவே எத்தனையோ தமிழ், ஆங்கில மின் புத்தகங்களை சுலபமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடிகிறது..
தமிழில் அதிகளவு மின்புத்தகங்கள் கிடைக்கின்றன. ஈழத் தமிழ் மண்ணின் ஆக்கங்களாக திகழும் அரும்பெரும் நூல்களின் களஞ்சியமாக
www.noolaham.net என்ற மின்நூலகம் திகழ்கின்றது.
அதேபோல் தமிழக இணையத்தள இலவச நூலகங்களாக www.chennailibrary.com,
www.projectmadurai.org/pmworks.html,
www.tamilvu.org/library/libcontnt.htm போன்ற பல தளங்கள் காணப்படுகின்றன.
இந்த வகையான இணையத்தள நூலகங்களில் இலவசமாகக் கிடைக்கும் தமிழ் மின்புத்தகங்கள் பெரும்பாலும் PDF File முறையிலும் HTML வகையானகோப்புக்களாகவுமே காணப்படுகின்றன.


அதேபோல் ஆங்கிலத்திலும்
http://manybooks.net,
www.mobipocket.com,
www.free-ebooks.net,
www.ereader.com/ereader/eBooks/freebooks.htm?
போன்ற பல தளங்களிலிருந்து பல்வகையான புத்தகங்களை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.


அதேவேளை ஆங்கிலமொழி மின் நூல்கள், பலவகையான E-Reader என்று கூறப்படும் இன்னொரு மென்பொருள் கொண்டு மின்நூல்களை வாசிக்கும் முறையை கொண்டிருக்கின்றன. இந்த வாசிப்பு மென்பொருளானது அழகான வடிவத்தை நிறங்களை பின்னணி படங்களை உருவாக்கும் வசதி கொண்டிருப்பதால் அதன் மூலம் நாம் வாசிக்கும் மின் புத்தகத்தின் அழகு மேம்படுகிறது.தமிழ் மின்னூல்களுக்கு இந்தமுறை இருப்பதாக தெரியவில்லை. (யாரவது இருந்தால் சொல்லுங்கோ) எதிர்காலத்தில் நிறைய உருவாகலாம்.
இப்போது ஆங்கில E-Reader கள் சிலவற்றின் மூலம், தமிழ் மின்நூல்களை நாம் எப்படி அழகுறச் செய்வது என்று பார்ப்போம். இப்படியான நூல்களை நீங்கள் செய்து மற்றவரும் பயன்படும்படி செய்து கொள்ளலாம்.


eReader மென்பொருட்கள் iPhone, iPod touch, BlackBerry, Palm OS, PocketPC, Windows Mobile, Smartphone Symbian போன்றவற்றிலும் பாவிக்கும் வகையில் இருப்பதால் இப்படி உருவாக்கும் தமிழ் மின்புத்தகங்களை இந்த மின் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்போரும் அவற்றில் பதிவு செய்துவைத்து வாசிக்க முடியும். (பரீட்சித்து பார்க்கவில்லை)
ஆங்கில வாசிப்பு மென்பொருட்கள் பலவகை உண்டு. இவை இலவசமாகவே கிடைக்கின்றன. உதாரணத்திற்கு eReader, microsoft Lit, Plucker, MobiPokcet, Ebook Maestro, FBReader எனப் பலவகை காணப்படுகின்றன.

முதலில் eReader ல் எப்படி தமிழ் மின்புத்தகம் உருவாக்குவது என்று பார்க்கலாம்.
eReader
இதற்கு தயார் படுத்த வேண்டியது
1) கதை அல்லது ஏதாவது தமிழ் ஆக்கம்

2) eReader Pro for Windows
3) Open office Text document
4) பாமினி எழுத்துரு அல்லது அந்த வகையை சார்ந்த இன்னொரு எழுத்துரு.
5) அவசியமேற்படில் பொங்குதமிழ் உருமாற்றி (www.Suratha.com)

1) முதலில் http://www.ereader.com/ என்ற இணையத்தளத்திலிருந்து வாசிப்புக்கான மென்பொருளை (eReader Pro for Windows) தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.இதை கணனியில் நிறுவி வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு: இதே இணையத்தளத்தில் அல்லது manybooks.net இல் நிறைய இலவச ஆங்கில மின் புத்தகங்கள் கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்து இந்த reader மூலம்வாசிக்கலாம். ( *.Pdb என்ற வகையிலான மின்நூல்கள் மட்டுமே.)

2) நீங்கள் எழுதிய அல்லது யாராவது நண்பர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆக்கம், கதை, கவிதை போன்றவை, பாமினி வகையை சேர்ந்த எழுத்து முறையால் ஆனதென்றால் (4) வது பகுதிக்கு போங்கள்.

3) unicode முறையிலோ TSCI அல்லது வேறெந்த முறையிலோ இருக்கும் ஆக்கத்தை பாமினி முறைக்கு மாற்ற வேண்டும். இதற்கு இணையத்தில் பொங்கு தமிழ் மூலம் உங்கள் கதையை வெட்டி ஒட்டி பாமினி முறைக்கு மாற்றவும்.( http://www.suratha.com/uni2bam.htm )பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றியிலிருந்து பாமினி உருவிற்கு மாற்றிய கதையினை copy செய்து
கொள்ளவும்.

4) Open office text document ஐ திறந்து அதில் பாமினி எழுத்துருவில் உள்ள கதையை Paste செய்யவும். இந்த document ஐ Save as மூலம் Save Type ——– AportisDoc (Palm *.Pdb) வகையைத் தெரிவு செய்து பதிவு செய்து கொள்ளவும்.
open office தரவிறக்கம் செய்யும் முகவரி
http://www.openoffice.org/

இப்போது கதை தயார். eReader ஐ திறந்து அதற்குள் கதையை எடுத்து வைப்பதன் (அல்லது File ————> add Books) மூலம் புதிய வடிவில் கதையை வாசிக்கலாம். எழுத்துக்கள் முதலில் புரியாத வடிவில்காணப்படும். Menu வில் view —-> view setting ல் சென்று bamini எழுத்துருவுக்கு மாற்றிக் கொள்ளவும். இங்கே டிசைன், பாமினி குடும்ப வேறுவகை எழுத்துரு, நிறம் இவைகளை மாற்றி கொள்ளலாம். கீழே உள்ளSave ஐ பயன்படுத்தி பதிந்து வைத்துவிட்டால்மீண்டும் eRaeder ஐ திறக்கும்போது விரும்பிய தெரிவு மாறாமல் இருப்பதைக் காணலாம்.

நன்றி:இணையம்

USB Drive இல் பாவிப்பதற்கான பயனுள்ள நான்கு மென்பொருட்கள்



USB DRIVE இல் பயன்படுத்தவென பயனுள்ள நான்கு மென்பொருட்களைப்பற்றி இங்கு குறிப்பிடுகிறேன்.


1.VIRUS தாக்கத்திலிருந்து உங்கள் USB Drive களை பாதுகாப்பதற்கான மென்பொருள்.
THUMBS SCREW என்னும் மென்பொருளை பயன்படுத்தி உங்கள் USB இல் வைரஸ் இலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். நீங்கள் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவியதன்(Install) பின்னர் System Tray Icon இல் வலது சொடுக்கின் (Right Click) மூலம் Make USB Writeable என்பதை தெரிவுசெய்து உங்கள் USB ஐ VIRUS இலிருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.










மென்பொருள் தரவிறக்க சுட்டி: Thumbscrew Download




2. பாதுகாப்பாக உங்கள் கணனியிலிருந்து USB Drive ஐ அகற்றுவதற்கான மென்பொருள்.















தரவிறக்க சுட்டி: USB Disk Ejector Download




3.DeskDrive எனப்படும் உங்கள் கணனியிலுள்ள Hard drives களுக்கு Shortcut களை வழங்கி இலகுவாக கையாள்வதற்கான மென்பொருள்.
















மென்பொருள் சுட்டி: DeskDrive Download
















4. உங்கள் USB Drive இல் காணாமல் போன கோப்புக்களை (Documents Folders) மீட்பதற்கான SyncToy என்னும் மென்பொருள்.






மென்பொருள் தரவிறக்க சுட்டி: SyncToy Download

Facebook இன் புதிய இடைமுகம் (Interface)-Facebook lite

சமூக வலைத்தளமான Facebook புதியதொரு Facebook lite என்னும் இலகுவான பயனாளர் இடைமுகத்தை (User Interface) தனது இணைய பயனாளர்களுக்காக (Facebook's User) வழங்கியுள்ளது. இது twitter க்கு போட்டியான ஒரு வருகை. முன்னைய இயல்புநிலை இடைமுகத்தை(standard Interface) விட அதி வேகமான கொண்டிருக்கிறது (Interface) கொண்டிருக்கின்றது. சிறிது காலத்துக்கு முன்னர் பரீட்சார்த்த (Testing) இணையப்பதிப்பாக இருந்த Facebook Lite தற்பொழுது பொது வெளியீடாக எல்லோரினதும் பாவனைக்கு வந்துள்ளது.




அதற்கான தள முகவரி: Facebook Lite




Tuesday, September 22, 2009

உலகத்த திருத்த ஒரு ட்ரை

படத்தை ஒழுங்கா பார்க்க படத்தில் கிளிக் பண்ணி பெருசா பாருங்க








Thursday, September 17, 2009

trial சாப்ட்வேரை எளிதாக கிராக் செய்யுங்கள்...

இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் பல பயனுள்ள மென்பொருட்கள் trial ஆகவே உள்ளது. எனவே இதனை சில நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடிகிறது.
ஒவ்வொரு முறை நாம் அந்த மென்பொருளை பயன்படுத்த ஆரம்பிக்கும் போதும் அது நம் கணிணியின் தேதியையும் அந்த மென்பொருள் பதியப்பட்ட தேதியையும் ஒப்பிடுகிறது. நமது கணிணியின் தேதி trial தேதிக்குள் இருந்தால் பயன்படுத்த அனுமதிக்கிறது. நமது கணிணியின் தேதியை trial நாளுக்குள் இருக்குமாறு செய்ய Run As Date என்கிற மென்பொருள் பயன்படுகிறது. இதனை Windows 2000, XP, 2003 and Vista ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும்.


நீங்கள் பதியும் மென்பொருளின் தேதியை நினைவு வைத்துக்கொள்ளவும்,
பின்னர் அதன் trial period முடியும் வரை இதனை சாதாரணமாக பயன்படுத்தலாம்.
Trial period முடிவதற்கு ஒரு நாள் முன்பு Run As Date மென்பொருளை இயக்கவும்.
பெரும்பாலான மென்பொருட்களை இதனைக்கொண்டு பயன்படுத்த முடியும்.

ரேபிட் ஷேர் ப்ரீமியம் இலவசமாக.......

  • நாம் பல ஆன் லைனில் பெறும் கோப்புகள் பெரும்பாலும் rapidshare, megaupload, hotfile போன்ற file sharing தளங்களில் பதிவிறக்கும் வகையிலேயே கிடைக்கின்றன. அவை இலவச பயனர்களுக்கு பதிவிறக்கத்திற்கு மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. எனவே அதிக கோப்புகளை பதிவிறக்க முடிவதில்லை. இதற்கென rapidshare premium link generator தளங்கள் பல இணையத்தில் இலவச சேவையாக premium லிங்க் களை அளிக்கின்றன.

  • நான் இணையத்தில் தேடியபோது கிடைத்த ஒரு தளம் அனைத்து file sharing premium account களுக்கான premium லிங்கை இலவசமாக அளிக்கிறது.

www.rapid8.com இதன் வழியாக 7 தளங்களின் premium லிங்கை இலவசமாக பெற முடியும்.

இதில் நீங்கள் பதிவிறக்க வேண்டிய கோப்பின் url ஐ கொடுத்து டவுன்லோடை க்ளிக் செய்யவும்.

இதன் மூலமாக ஒரே நேரத்தில் பல கோப்புகளை பதிவிறக்க முடியும் , மேலும் டவுன்லோடு மேனேஜர் மூலம் பல பாகமாக பிரித்து வேகமாகவும் செய்ய முடியம். மேலும் இது resume supported டவுன்லோடிங்கை தருகிறது.

Tuesday, September 15, 2009

FLAMES


  • இருவருக்கிடையுள்ள உறவை காணும் FLAMES Game பற்றி அனைவரும்அறிந்திருப்பீர்கள். மன்மதன் படத்தில் இதைப்பற்றி ஒரு காட்சி வரும். சிம்புகேம் வைத்து தன காதலிக்கும் தனக்கும் உள்ள உறவை கண்டுபிடிப்பதுபோல் காட்சிகள் உண்டு.படம் பார்க்காதவர்களுக்கும் ,FLAMES பற்றி அறியாதவர்களுக்கும் ஒரு சிறு விளக்கம்
FLAMES

F - Friend
L - Lover
A - Affection
M - Marriage
E - Enemy
S - Sister


  • 1.ஒரு ஆண் மற்றும் பெண் பெயர்களை எடுத்து கொள்க
உதாரணமாக Ajith மற்றும் Shalini எடுத்து கொள்வோம்


  • 2. இரண்டு பெயர்களுக்கிடையே உள்ள பொதுவான எழுத்துக்களை நீக்குக
நீக்கிய பின் jt & Slni


  • 3. மிஞ்சிய எழுத்துகளின் எண்ணிக்கையை எடுத்துக்கொள்க
6

  • 4. FLAMES என்ற வார்த்தையை எடுத்து கொண்டு , F லிருந்து ஆரம்பித்து 6 வது எழுத்தை நீக்குக
FLAME



  • 5.மீண்டும் நீக்கிய எழுத்துக்கு அடுத்த எழுத்திலிருந்து மீண்டும் ஆரம்பித்து அதே போல் 6 வது எழுத்தை நீக்குக.இதே போல் ஒரே ஒரு எழுத்து வரும் வரை செய்க
மிஞ்சுவது M - Marriage

Sunday, September 6, 2009

தொலைந்த சாஃப்ட்வேர் சீரியல் எண்களை மீட்க


பலவகையான மென்பொருட்களை நமது கணினியில் நிறுவுகிறோம்.அந்த மென்பொருட்களின் சீரியல் எண்ணை குறித்து கொள்ள மறந்து விட வாய்ப்புள்ளது.சில சமயம் அந்த மென்பொருட்களை மீண்டும் நிறுவும் போதோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலோ மென்பொருளின் சாப்ட்வேர் சீரியல் எண் தேவைப்படுகிறது.

கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களின் சீரியல் எண்களையும் தெரிந்து கொள்ள இந்த எளிமையான 75KB அளவுள்ள இலவச மென்பொருள் உதவுகிறது.தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்

http://www.freewarefiles.com/downloads_counter.php?programid=44343

yooouuutuuube.com-யூடியுப் வீடியோக்களை மாறுபட்ட வடிவில் காண

வழக்கமாக யூடியுபில் பார்ப்பது போல் அல்லாமல் வித்தியாசமாக பல சிறு சிறு திரைகளில் ஒரு வீடியோவை பார்க்கலாம் இந்த தளம் மூலமாக.கணினி திரை சற்று பெரியதாக இருந்தால் நன்று.சிறு திரைகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.நமக்கு விருப்பமான யூடியுப் வீடியோவின் URL தேர்ந்தெடுத்து இந்த தளத்தில் உள்ளீடு செய்தால் பல திரை வடிவில் காணலாம்.

http://www.yooouuutuuube.com

இரண்டு உதாரணங்கள் இங்கே.


http://www.yooouuutuuube.com/v/?rows=18&cols=18&id=igP1Mcy5fDI&startZoom=1


http://www.yooouuutuuube.com/v/?rows=18&cols=18&id=pAwR6w2TgxY&startZoom=1

Wednesday, September 2, 2009

நோக்கியா கைத்தொலைபேசி ஒரிஜினல் கண்டுபிடிப்பது எப்படி ?


பலருடைய நோக்கியா கைத்தொலைபேசி புதிதாக வாங்கி சில மாதங்களிலேயே காலை வாரத்தொடங்கிவிடும்.ஆனால் சிலருடையது வாங்கி ஐந்து வருஷம் சென்றாலும் அப்படியே இருக்கும்.

நீங்கள் பயன்படுத்தும் Nokia கைத்தொலைபேசி அசலா ? போலியா ? ? என நீங்கள் சோதித்திருக்கிறீர்களா ? இல்லையெனில் இதோ அருமையான முறை

* பின்வரும் இலக்கங்களை அழுத்துங்கள் *#06#

* 7வது 8வது இலக்கங்களில் உள்ளவற்றை கவனமாக பார்த்து கீழுள்ளவற்றோடு ஒப்பிடுங்கள்.

Number---------Phone serial no

1 ----------------------x


2 ----------------------x

3 ----------------------x

4 ----------------------x

5 ----------------------x

6 ----------------------x

7th------ --------------?

8th------- -------------?

9 -------- ------ -------x

10----------------- ----x

11 ---------------------x

12 ---------------------x

13 ---------------------x

14------------- --------x

  • உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 02 அல்லது 20 ஆக இருந்ததால் உங்களுடைய போன் ஐக்கிய அரபு நாடுகளில் தயாரிக்கப்பட்டது மிகவும் கூடாதது. விரைவில் பழுதடையும்.
  • சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 08 அல்லது 80 ஆக இருந்ததால உங்களுடைய போன் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. பரவாயில்லை .
  • சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 01 அல்லது 10 ஆக இருந்ததால உங்களுடைய போன் பின்லாந்தில் தயாரிக்கப்பட்டது. நல்லது சில வருடங்கள் பாவிக்கலாம்.
  • உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வாதி இலக்கம் 00 ஆக இருந்தால் உங்கள் போன் ஒரிஜினல் கம்பனியில் தயாரிக்கப்பட்டது. பல வருடங்கள் பாவிக்கும்.
  • உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வாதி இலக்கம் 13 ஆக இருந்தால் உங்கள் போன் Azerbaijan இல் தயாரிக்கப்பட்டது. மிகவும் மோசமானது. உங்களுடைய உடல் நலத்துக்கு ஆபத்தானது.
  • உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வாதி இலக்கம் 03 என்றால் கொரியா ஓகே ரகம்

இனியாவது மொபைல் போன் வாங்கும்போது மேற்கூறிய விடயங்களை கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.

சாம்சங் அறிமுகப்படுத்தும் புதிய 'ஹெட்செட்'



Related Posts Plugin for WordPress, Blogger...