Tuesday, November 30, 2010

வை-பை கதிர்கள் மனிதர்களை தாக்குகின்றதா?

  வை-பை ( wi-fi) கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் , சிலவேளைகளில் இவை மனிதர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வெகனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.




இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர்.

இதன்போது வை-பை கதிர்களுக்குஅண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதனூடக வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில வேளை இவை மனிதனையும் பாதிக்கும் சாத்தியம் அதிகம் எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்..

இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளதெனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, கையடக்கத்தொலைபேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்கள் கூட தாவரங்களைப் பாதிக்கின்றமை நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். _

Friday, November 26, 2010

தற்காலிக ' கடவுச் சொல் வசதி பேஸ்புக்கிள்

சர்ச்சைகளின் உறைவிடமாகிவிட்டது பேஸ்புக். எனினும் புதுப்புது வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதையும் பேஸ்புக் தவறவில்லை.




தற்போது அறிமுகப்படுத்தியுள்ள வசதியானது ஒரு தடவை மட்டும் உபயோகப்படுத்தக்கூடியதும் 20 நிமிடங்களில் காலாவதியாகக் கூடியதுமான கடவுச் சொல்லாகும்( Temporary Password).

பொது இடங்களில் உதாரணமாக 'நெட்கஃபே' மற்றும் மற்றையவர்களின் கணினிகளின் ஊடாக பேஸ்புக்கைப் பாவிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.

இந்நிலையில் உங்களின் கடவுச் சொல் திருடப்படலாம் அல்லது வேறு தவறான வழிகளில் உபயோகப்படுத்தப்படலாம்.

இதனைத் தவிர்ப்பதற்கான நடைமுறையே இது. இதற்காக உங்கள் கையடக்கத் தொலைபேசியை நீங்கள் பேஸ்புக்குடன் இணைக்க வேண்டும்.

உங்கள் கைத்தொலைபேசிகளில் 'otp' என டைப் செய்து 32665 என்ற இலக்கத்திற்கு அனுப்பினால் உங்களுக்கான கடவுச்சொல் கிடைக்கப்பெறும்.

இதனை ஒரு தடவை மற்றும் 20 நிமிடங்கள் வரையே பயன்படுத்தமுடியும். இதனால் பாதுகாப்பு மேலும் மேம்படுத்தப்படுகின்றது.

கடந்தவாரம் பேஸ்புக் ' ரிமோட் லொக் அவுட்' வசதியையும் அறிமுகப்படுத்தியிருந்தது. இன்னும் சில நாட்களில் இவ்வசதியை அனைவரும் பெறக்கூடியதாகவிருக்கும்.

Tuesday, November 23, 2010

தானாக நிறம் மாறும் நவீன ஆடை!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தனது புதிய ஆடை வடிவமைப்புடன் தொழில்நுட்பத்தினையும் இணைத்து நவீன ஆடையொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளார்.




இவரது இந்ந ஆடையில் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஊடாக நிறச்சாயங்கள் செலுத்தப்படுகின்றன. இவ்வாடை ' பிசியூடோமோர்ப் ' என அழைக்கப்படுகின்றது.

' பிசியூடோமோர்ப் ' இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. உடம்புப்பகுதி வெள்ளை நிறத்தால் ஆனது. மற்றைய பகுதி மெல்லிய குழாய்களினால் ஆனது.

இவ்வாடையின் கழுத்துப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் மூலம் நிறச் சாயங்கள் ஆடைகளுக்குச் செலுத்தப்படுகின்றன. இச்சாயங்களின் மூலம் ஆடை, பலவித நிறங்களில் தோற்றமளிக்கின்றது.

இதனைக் கட்டுப்படுத்தும் இலத்திரனியல் சேர்க்கிட் 9 வோல்ட் மின்கலங்களால் வலுவூட்டப்படுகின்றன.

நிறச்சாயங்கள் தன்னிச்சையாக ஆடைகளின் மீது செலுத்தப்படுவதால் புதுவிதமான டிசைன்களில் ஆடைகள் காணப்படுவதாக இதனை உருவாக்கியுள்ள 'அனொவுக் விப்ரச்ட்' தெரிவிக்கின்றார்.

நவீன ஆடை இயக்கப்படும் முறையினை இக் காணொளியில் காணமுடியும்.

Sunday, November 21, 2010

எவரும் கையாளக் கூடிய ' ரோபோடிக்' மென்பொருள்

'ரோபோடிக்' துறையில் பாரிய அறிவற்றவர்களால் கூட 'ஹியூமனொயிட்' (humanoid) என்றழைக்கப்படும் மனிதனைப் போன்ற ரோபோக்களை இயக்கக்கூடிய மென்பொருளைத் தாம் உருவாக்கியுள்ளதாக ஜப்பானின் பல்கலைக்கழகமொன்று அறிவித்துள்ளது.


' கொரோனொயிட் ' ( Choreonoid ) என்றழைக்கப்படும் இம்மென்பொருளை 'ரோபோடிக் புரோகிராமிங்' அறிவற்றவர்கள் கூட உபயோகிக்க முடியும்.

உதாரணமாகச் சாதாரண 'கிரஃபிக் டிசைனர்' ஒருவராலேயே இம்மென்பொருளைக் கட்டுப்படுத்தமுடியும்.

கணினி மவுசின் ( Mouse ) உதவியுடன் ரோபோவின் அங்க அசைவுகளைக் கட்டுப்படுத்த முடியும்.

மேலும் இதன் மூலம் ரோபோவை பாய்தல், குதித்தல் ஆகிய செயற்பாடுகளைச் செய்விக்க முடிவதுடன், அதற்கு ஏற்பட்ட அதிர்வுகளையும் கணக்கிட முடியும்.

நமது பிரயோகங்கள் தவறெனில் இம்மென்பொருள் அதனைக் கட்டுப்படுத்தவும் தவறுவதில்லை.

இது 'ரோபோடிக்' துறையில் புதிய புரட்சியாகக் கருதப்படுகின்றது.

அம்மென்பொருளின் மூலம் இயக்கப்படும் 'ஹியூமனொயிட் ரோபோ' தொடர்பிலான காணொளி :

Saturday, November 20, 2010

தொழில்நுட்ப உலகில் கடந்த சில நாட்களுக்குள் ஏற்பட்ட சில முக்கிய நிகழ்வு

தொழில்நுட்ப உலகில் கடந்த சில நாட்களுக்குள் ஏற்பட்ட சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாக இன்றைய செய்தி அமைகின்றது.



பேஸ்புக்கின் மெசேஜிங் சேவை

அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு சேவையாகும். ஆரம்பத்தில் மின்னஞ்சல் சேவையெனக் கூறப்பட்டது.
எனினும் இது ஒரு மேம்படுத்தப்பட்ட மின்னஞ்சல் வசதியுடன் கூடிய மெசேஜிங் சேவையென பேஸ்புக் அறிவித்துள்ளது.

பேஸ்புக் கணக்குகளைத்தாக்கிய புதிய பக் (Bug)

பேஸ்புக் கணக்குகளைப் புதியதொரு பக் (Bug) தாக்கியது.
இதன் காரணமாக பலரின் கணக்குகள் செயலிழந்துள்ளதாக பேஸ்புக்கிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அதனை கூடிய விரைவில் சரி செய்வதாகவும் பேஸ்புக் அறிவித்துள்ளது.

மீண்டும் பிற்போடப்பட்ட கூகுளின் 'ஜிஞ்ஞர் பிரட்' வெளியீடு

கூகுள் நிறுவனத்தின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் மற்றுமொறு இயங்குதள தொகுப்பான அண்ட்ரோயிட் 2.3 'ஜிஞ்ஞர் பிரட்' வெளியீடு மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.
கூகுளின் அண்ட்ரோயிட் இயங்குதளமானது உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயர் பொக்ஸ் 4 பீடா வெளியீடு

பிரபல இயங்குதளமாக மொஸிலா பயர்பொக்ஸ் 4 சோதனைத்தொகுப்புக்களை (Beta) தற்போது வெளியிட்டுள்ளது.
முன்னையதை விட நன்கு மேம்பட்ட கிராபிக்ஸ் வசதி, ஜாவா வசதியினை இது தரவல்லது என அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.

40 நாட்களில் 1 மில்லியன் அண்ட்ரோயிட் 2.2 மொபைல்களை விற்பனை செய்த எல்.ஜி

பிரபல எல்.ஜி (LG) நிறுவனம் சுமார் 1 மில்லியன் அண்ட்ரோயிட் 2.2 இயங்குதள ஒப்டிமஸ் ரக மொபைல்களை விற்பனை செய்ததாக அறிவித்தது.
இது தனது விற்பனை வரலாற்றில் ஒரு மைல் கல்லென எல்.ஜி. அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டியானி (Tianhe) - 1 A உலகின் அதிவேக சுப்பர் கணினியை முந்தும் கணினியை வெளியிடவுள்ள அமெரிக்கா

உலகின் அதிவேக கணினி டியானி (Tianhe) - 1 A என ஏற்கனவே செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
எனினும் இக்கணினியின் வேகத்தை முறியடிக்கக் கூடியதும் இதனை விட 8 மடங்கு வேகமானதுமான ஒரு கணினியை 2012இல் அமெரிக்கா வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Thursday, November 18, 2010

சமூகவலைப் பின்னல்களில் மலேசியருக்கு அதிக நண்பர்கள்

சமூகவலைப் பின்னல் தளங்களில் அதிக நண்பர்களைக் கொண்டிருப்பவர்கள் மலேசியர்கள் எனவும் குறைவாகக் கொண்டிருப்பவர்கள் ஜப்பானியர்கள் எனவும் புதிய ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

மேலும் ஈ-மெயில் பாவனையானது காலங்கடந்து விட்டதாகவும் அவ்வாய்வு தெரிவிக்கின்றது.



பிரித்தானியாவைச் சேர்ந்த நிறுவனமொன்று சுமார் 46 நாடுகளில் 50,000 பேரிடம் மேற்படி ஆய்வினை நடத்தியிருந்தது.

இவ்வாய்வின் முடிவுகளின் படி இணையப் பாவனையாளர்களில் அதிகமானோர் மின்னஞ்சல் பாவனையைவிட 'பேஸ்புக்' மற்றும் 'லிங்டின்' போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் வெகு நேரத்தைச் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் லத்தீன் அமெரிக்கா, மத்தியகிழக்கு, சீனா போன்ற நாடுகளில் சமூக வலைப் பின்னல்கள் வேகமாக வளர்ச்சியடைந்துள்ள போதிலும் அங்கே கணிசமானோர் மின்னஞ்சலை உபயோகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசியர்கள் சராசரியாக 233 மற்றும் பிரேஸிலியர்கள் 231 நண்பர்களையும் சமூகவலைப் பின்னல் தளங்களில் கொண்டுள்ளனர். ஜப்பானியர்கள் சாராசரியாக 29 நண்பர்களைக் கொண்டுள்ளனர்.

சீனாவில் இணையப் பாவனையாளர்களில் ஐந்தில் ஒருவர் அதாவது 88 % மற்றும் பிரேஸிலியர்களில் 51 % வலைப்பதிவில் எழுதுகின்றனர். இது அமெரிக்காவை விட 32 % அதிகமாகும்.

இது மட்டுமல்லாமல், தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி ஆகியவற்றின் பாவனை வெகுவாக குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைத்தொலைபேசிகளின் மூலம் சமூகவலைப் பின்னலை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, November 17, 2010

GOOGLE தேடுதல் இரகசியங்கள் !!

நம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் தேடுபொறி Google !! இதில் பொதுவாக இணையத்தளங்களை மட்டுமே நாம் தேடி வந்தோம். ஆனால் GOOGLE இன்னும் பல வசதிகளை நமக்கு அளிக்கிறது. இப்பொழுது நாம் கூகிளில் மறைந்துள்ள சில வசதிகளை பார்ப்போம்.


1.நமக்கு SONY நிறுவனத்தின் தற்போதைய பங்கு சந்தை நிலவரத்தை அறிய.......sony stock price என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும்.


2. குறிப்பிட்ட இடத்தின் வெப்பநிலையை அறிய உதாரணமாக இலங்கையில் உள்ள ஒரு இடத்தின் வெப்ப நிலையை அறிந்து கொள்ள colombo weather என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும்.. அந்த இடத்தின் வெப்ப நிலையை காட்டும்.


3.ஒரு நாட்டின் தற்போதைய நேரத்தை அறிந்துகொள்ள உதாரணமாக இலங்கையின் நேரத்தை அறிய sri lanka time என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும்.. அந்த இடத்தின் நேரத்தை அறிந்துகொள்ளலாம்.


4.ஒரு குறிப்பிட்ட அணியின் Score மற்றும் அட்டவணையை தெரிந்துகொள்ள sri lanka cricket score என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும்.


5.Google-ல் உள்ள Calculator மூலம் நாம் விரும்பும் Equation-க்கு விடையை மிக எளிமையாக அறிந்திட முடியும். உதாரணமாக 2+2= என்று type பண்ணினால் விடை 5 என்று வரலாம். eg:- 2*10= , 1000/58= etc....


6.ஒரு அளவினை வேறு ஒரு அளவினில் அறிந்திட,சான்றுக்கு 4 Kg ஐ gram ல் அறிந்துகொள்ள 4 Kg in g என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும்.


7.ஒரு குறிபிட்ட சொற்கள் பற்றி மட்டும் தேடாமல்,அந்த சொற்களுக்கு தொடர்பான சொல்லை பற்றியும் அறிந்து, ~ என்ற எழுத்தை பயன்படுத்தவும். சான்றுக்கு ~ animation.


8.ஒரு குறிப்பிட்ட சொற்களின் Definition-ஐ அறிந்துகொள்ள, சான்றுக்கு philosophy என்பதின் Definition-ஐ அறிந்துகொள்ள define philosophy என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும்.


9.ஒரு திரைப்படத்தின் Reviews மற்றும் Showtime பற்றி அறிந்து கொள்ள சான்றுக்கு Movie Endhiran என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும்.


10. ஒரு இடத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் Housing பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள housing colombo or real state colombo என்று Type செய்து Enter Key அழுத்தவும்.


11.ஒரு குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் விமானங்கள் குறிப்பிட்ட ஊரிற்கு வந்து செல்லும் விவரங்களை அறிய,அந்த விமானத்தின் எண்ணை சேர்த்து கொடுத்தால் போதும்.... Sri lankan airlines 320


12.ஒரு நாட்டின் நாணய மதிப்பை வேறு நாட்டின் நாணய மதிப்பிற்கு மாற்ற. சான்றுக்கு, US டாலரை இலங்கை ரூபாவில் பெற.... 200$ in LKR or $ இன் இன்றைய மதிப்பை இலங்கை ரூபாவில் அறிய.... 1$ in LKR


13.Colombo Map-ஐ நாம் பார்க்க வேண்டும் என்றால் Colombo map என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும்.


14. Google Search where,the,how,and போன்ற வார்த்தைகளை ஒதுக்கிவிடும் ஆகையால் இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது " + " என்ற குறியை சேர்த்து கொடுக்கவும் .


15.ஒரு குறிப்பிட்டவர் கண்டுபிடித்த பொருள் போன்ற விவரங்களை அறிய விரும்பினால் " * " என்ற குறியை சேர்த்து பயன்படுத்தலாம்,சான்றுக்கு Isaac newton பற்றி அறிய...... Isaac newton discovered*


16.குறிப்பிட்ட US Telephone Area Code-ன் Geographical Location-ஐ பார்க்க விரும்பினால்,Google Search Box-ல்,அந்த Location-ன் மூன்று இலக்க Area Code-ஐ தட்டச்சி செய்து Enter Key-ஐ அழுத்தவும் ...

17.கூகிளில் "படங்கள்" தேடல் ( இது பலருக்கு தெரிந்திருந்தாலும் சிலருக்கு பலனுள்ளதாக அமையும்)
 உதாரணத்திற்கு ரோசா பூவை தேடுகின்றேன்: அதில் rosa என சொடுக்கின்றேன்  பின்னர் அதை சுருக்கி தனிய மஞ்சள் நிற ரோசா பூவை மட்டும் தேட கீழுள்ளதை முகவரியில் பதியலாம்
http://images.google...imgcolor=yellow
இல்லை வெள்ளை நிற மாளிகைகளை தேட
http://images.google...&imgcolor=white

இல்லை நீங்கள் ஒரு அழகிய சிவப்பு நிற (NOKIA) கைபேசியை வாங்கலாம் என்று முடிவேடுத்துள்ளீர்கள் ஆனால் அந்த (Model)லில் சிவப்பு நிற கைபேசி இருக்குமா என்று உங்களுக்கு தெரியவில்லை. இப்போது கூகிள் பட தேடலில் சிவப்பு நிற (NOKIA) கைபேசியைன் (Model) பற்றி எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

கூகிள் பட தேடலின் (URL)லில் கடைசியில் &imgcolor=red என்று சேர்த்தால் போதும்.

 18.கூகிளில் பொதுவாக நாம் தேடும்போது எமக்கு தேவையான உபயோகமான தவல்களுடன் அவை சம்பந்தப்பட்டவையும் கிடைக்கும். இந்த நேரத்தில், அநேகமான தவல்கள் உபயோகமாக இருந்தாலும் எமக்கு குறிப்பிட்ட தவலை தேட "உயர்தர தேடலை" ( Advanced Search) சொடுக்கலாம்.

http://www.google.com/advanced_search

இந்த தேடுதல் உங்களிடம் இருந்து கூடுதலான தகவல்களை எதிபார்க்கும். ஆனால், அதனால் தேடுதல் இயந்திரம் எமக்கு தேவையான தகவல்களை அழகாக தொகுத்து தரும்.

Monday, November 15, 2010

உலகின் உயர்ந்த சிகரமான எவரஸ்டிலிருந்து 3G

  உலகின் உயர்ந்த சிகரமான எவரஸ்டிலிருந்தும் இனிமேல் இணையத்தினை உபயோகிக்க முடியும்.
வீடியோ அழைப்பினையும் மேற்கொள்ளமுடியும்.


3 ஜி வலையமைப்பினூடக இவையனைத்தையும் அவ்வுயரத்தில் சாத்தியப்படுத்தியுள்ளது நேபாளிய தொலைத்தொடர்பு நிறுவனமான என்செல் .

சுமார் 8 தொலைத்தொடர்பு கட்டமைப்புக்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5200 அடி உயரம் வரை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

என்செல் என்பது சுவீடன் நாட்டு நிறுவனமான டெலிசொனெராவினுடையதாகும்.

இதுவரைகாலமும் மலையேறுபவர்கள் செய்மதி தொலைபேசிகள் மற்றும் சாதாரண கைத்தொலைபேசி வசதியை மட்டுமே பெற்றுவந்தனர்.

இனிமேல் அவர்கள் காலநிலை தொடர்பான அறிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவற்றை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Saturday, November 13, 2010

சீனாவின் அதிவேக சுப்பர் கணினி: வேகம் 2.507 பீடாபுலொப்ஸ்

உலகின் அதி வேக சுப்பர் கணினியை (Super Computer) கொண்ட நாடு என்ற பெருமையை சீனா நேற்று பெற்றுக்கொண்டது.

டியானி (Tianhe) - 1 A என அழைக்கப்படும் கணினியே அது. இதன் வேகம் 2.507 பீடாபுலொப்ஸ் (Petaflops). அதாவது ஒரு செக்கனில் 2,507 ட்ரில்லியன் கணிப்புக்களை மேற்கொள்ளக்கூடியதாகும்.


இது மற்றைய சுப்பர் கணினிகளைவிட 43 வீதம் வேகம் கூடியது.

இக்கணினியானது சீன தேசிய பாதுகாப்புத் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தினாலேயே (National University of Defence Technology (NUDT) உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கான மொத்த செலவு 88 மில்லியன் அமெரிக்க டொலர்கள். சுமார் 200 பொறியியலாளர்களால் 2 வருட கடும் உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இது இயங்குவதற்கு மொத்தமாக 4.04 மெகாவோற்ஸ் மின்சாரம் தேவைப்படுகின்றது.

இக்கணினி, 14,336 இண்டெல் ஸியோன் சிபியுக்கள் ( CPU ) மற்றும் 7,168 Nvidia Tesla M2050 ஜி.பி.யுக்களையும்( GPU - Graphics processing unit) கொண்டுள்ளது.

முதன் முறையாக 2009 ஆம் ஆண்டு இக்கணினி உருவாக்கப்பட்டது. அதன்போது இது உலகின் 5 ஆவது வேக கணினி என்ற பெருமையை மட்டுமே கொண்டிருந்தது.

ஆனால் தற்போது இது நன்கு மேம்படுத்தப்பட்டதையடுத்து உலகின் 'அதிவேக கணினி' என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இதுவரை அமெரிக்காவின் கிரேஸி எக்ஸ்.டி5 ஜகுவார் Cray XT5 Jaguar, உலகின் அதிவேக சுப்பர் கணினியாக இருந்து வந்தது. இது 224,162 ஒப்டெரொன் (Opteron CPUs) சிபியுக்களைக்கொண்டது. இதன் வேகம் 1.75 பீடாபுலொப்ஸ் (Petaflops) ஆகும்.

எனினும் சீனா அதனை டியானி ( Tianhe ) - 1 A மூலம் முறியடித்துள்ளது.



Friday, November 12, 2010

டாப் 10 பாஸ்வேர்டு கிராக்கர் (Top Ten Password Creacker)

நண்பர்களே, இதில் 10 பாஸ்வேர்டு கிராக்கர்களை கொடுத்துள்ளேன், உபயோகித்துப் பார்க்கவும்.

 




1. Cain And Abel:-
இது ஒரு சிறந்த Windows Based பாஸ்வேர்டு கிராக்கர். இது பாஸ்வேர்டுகளை sniffing, dictionery, Brute force attack மற்றும், Crypt analysis attack போன்ற முறைகளைக் கொண்டு கண்டு பிடிக்கிறது. மேலும் பாஸ்வேர்டு டிகோடிங்க்கும் பயன்படுத்த முடியும்.
இந்த மென்பொருளை இங்கிருந்து பெறலாம்.

2. John the ripper:-
இது ஒரு fastest பாஸ்வேர்டு கிராக்கர். இது யுனிக்ஸ் based ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் படி வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் பாஸ்வேர்டு Decryption-க்கும் பயன்படுத்தப் படுகிறது (சென்ற பதிவில் உபயோகித்தோம்). இதனை இயக்க வேர்டு லிஸ்ட்கள் தேவை. அவற்றை கீழே உள்ள தளங்களில் இருந்து பெறலாம்.
ftp://ftp.ox.ac.uk/pub/wordlists
http://www.outpost9.com/files/WordLists.html
ftp://ftp.mirrorgeek.com/openwall/wordlists
இந்த மென்பொருளை இங்கிருந்து பெறலாம்.

3. THC Hydra:-
இது fastest நெட்வொர்க் பாஸ்வேர்டு கிராக்கர். இது Brute Force Attack மூலமாக பாஸ்வேர்டுகளை கண்டுபிடிக்கிறது.இது http, ftp, telnet, smb உட்பட 30 protocol களில் செயல்படும். இதனை பெற இங்கே சொடுக்கவும்.
http://freeworld.thc.org/thc-hydra/hydra_pass.jpg


4. Air Crack:-
இது 802.11 a, 802.11b, 802.11g வயர்லஸ் நெட்வொர்க்களின் பாஸ்வேர்டுகளை கிராக் செய்கிறது. இது ஒருமுறை packet information-ஐ பெற்ற பின்னர், 512-பிட் WPA கீகள், 40-களை கண்டுபிடிக்கிறது. இதனுடன் AirDump (Packet Capture Program), Air crack (WEP and WPA-PSK cracking) and AirDecap (Decryption toll for WEP,WPA ). இதனை இங்கிருந்து பெறலாம்.
http://wirelessdefence.org/Contents/Images/aircrack_win1.PNG

5. l0pht crack:-
இது ஒரு விண்டோஸ் பாஸ்வேர்டு ரெகவரி மென்பொருள். இதன் மூலம், primary domain, controller, Active directory ஆகிய பாஸ்வேர்டுகளை கிராக் செய்ய முடியும். இதனை இங்கு பெறலாம். மேலும் இதற்கு பதிலாக OphCrack-ம் பயனடுத்தலாம்.
6. Airsnort:-
இதுவும் ஒரு வயர்லெஸ் WEP, WPA கீ கிராக்கிங் டூல். இதனை இங்கு பெறலாம். இது போல் இன்னொரு டூல் இங்கே.
7. Solar Winds:-
SNMP பாஸ்வேர்டு கிராக்கர், பாஸ்வேர்டு டீகிரிப்டர் போன்றபல மென்பொருட்களை solarwinds தளம் கொண்டுள்ளது.


8. PwDump:-
இது ஒரு விண்டோஸ் பாஸ்வேர்டு கிராக்கர். இதனை இங்கு பெறலாம்.

9. Rainbow Crack:-
இது ஒரு மிக வேகமான Brute force attack tool. இதனை இங்கு பெறலாம்.

10. Brutus:-
இதுவும் ஒரு Remote Password cracking Tool ஆகும். இது HTTP, POP3, FTP, SMB, TELNET, IMAP, NTP ஆகிய Protocol-களை மட்டும் support பண்ணுகிறது. இதனை இங்கு பெறலாம்.


சூரிய சக்தியில் வயர்களற்ற கணினி 'கீபோர்ட்' லொஜிடெக் அறிமுகம்

லொஜிடெக் (Logitech) நிறுவனம் அண்மையில் கணினிகளுக்கு பயன்படுத்தப்படும் சூரியசக்தியில் இயங்கக்கூடிய வயர்களற்ற கீபோர்ட்டை (K750) அறிமுகப்படுத்தியுள்ளது.




இதற்கு முன்னர் இருந்த வயர்களற்ற (Wireless) கீபோர்ட்கள், பற்றரிகளின் மூலமே இயங்கி வந்தது. ஆனால் லொஜிடெக்கின் புதிய கீபோர்ட்கள் சூரிய ஒளியின் மூலம் இயங்குகிறது.

ஒரு தடவை முற்றாக 'சார்ஜ்' செய்தால், சுமார் 3 மாத காலம் வரை தொடர்ச்சியாக இதனைப் பயன்படுத்த முடியுமென லொஜிடெக் உறுதியளிக்கின்றது.

இது 80 அமெரிக்க டொலர்களில் விற்பனையாகிறது. __

Thursday, November 11, 2010

விண்டோஸ் 8 தொகுப்பு 2012 இல் ?

விண்டோஸ் 8 இயங்குதளமானது (Operating System) 2012 இல் வெளியிடப்படுமென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.

இது தொடர்பான செய்தியை மைக்ரோசொப்ட் தனது ' டச்சு' மொழி வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.


இறுதியாக மைக்ரோசொப்ட் தனது விண்டோஸ் 7 இயங்குதளத்தினை 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது.

விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே விண்டோஸ் 7 ஆகும்.

அண்மையில் அப்பிள் தனது மெக். ஒ.எஸ் எக்ஸ் 10.7 லயன் (Mac OS X 10.7 Lion) இயங்குதளத்தினை வெளியிட்டிருந்தது.

மேலும் இதில் அப்பிளின் அப் ஸ்டோர் (App Store) போன்ற வசதியையும் அப்பிள் உள்ளடக்கியிருந்தது.

மைக்ரோசொப்டும் இது போன்ற வசதியினை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விண்டோஸ் 7 ஐப் போல விண்டோஸ் 8 உம் பல புதிய மாற்றங்களை உள்ளடக்கியிருக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தற்போது மைக்ரோசொப்ட், விண்டோஸ் போன் 7(Windows 7 mobile) மற்றும் எக்ஸ் பொக்ஸ் 360 இக்கான கைநெக்ட்(kinect) மோசன் சிஸ்டம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Monday, November 8, 2010

' பிளேஸ்டேசன் போன் ' - சொனியின் இரகசிய தயாரிப்பு

பிரபல இலத்திரனியல் உபகரண தயாரிப்பு நிறுவனமான சொனி பிளேஸ்டேசன் போன் (Playstation Phone) எனும் நவீன கையடக்கத்தொலைபேசியினை தயாரித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

பி.எஸ்.பி (PSP- PlayStation Portable) என்பது சொனி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கையடக்க கேமிங் ( Gaming ) சாதனமாகும்.


இதைப்போன்ற கேமிங் அனுபவத்தினை தரக்கூடியதும் கேமிங்கிற்கு முக்கியத்துவம் அளிப்பதுமான கையடக்கத் தொலைபேசியினை சொனி இரகசியமாக தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனுடன் நவீன கையடக்கத்தொலைபேசியின் பண்பையும் இது கொண்டிருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

சொனி மற்றும் எரிக்ஸன் நிறுவனங்களின் ' சொனிஎரிக்சன்' தயாரிப்பாகவே இது வெளியாகவுள்ளது.

இது கூகுளின் அண்ட்ரோயிட் இயங்குதளத்தினை (Android OS) கொண்டு இயங்கவுள்ளது.

இதன் சிறப்பம்சங்கள்

1) 1GHz Qualcomm MSM8655 processor
2) 512MB RAM,
3) 1GB ROM,
4) 3.7 to 4.1 inches tough screen

மேலும் கேம் விளையாடுவதற்கு ஏதுவான கீபேட்களும் இணைக்கப்படவுள்ளன. இது தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.

இவ்வுபகரணமானது 2011 ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Saturday, November 6, 2010

97 $ விலையில் 3D கைத்தொலைபேசி 'ஸ்பைஸ் மொபைல்' அதிரடி

இந்தியாவில் பிரபல மலிவுவிலை கையடக்கத் தொலைபேசிகளைத் தயாரித்து வரும் 'ஸ்பைஸ்' மொபைல் நிறுவனம் 97 அமெரிக்க டொலர் பெறுமதியில் முப்பரிமாண திரையைக் கொண்ட 3D கைத்தொலைபேசியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.


M - 67 எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கையடக்கத் தொலைபேசியானது பலரினது எதிர்ப்பார்ப்பையும் தூண்டிவிட்டுள்ளது.

இதன் பெறுமதி இந்திய மதிப்பின்படி வெறும் 4,299 ரூபா மட்டுமே.

மேலும் முப்பரிமாண தன்மையினை அனுபவிக்க கண்ணாடி அணிய தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பாகும்.

2 சிம்கள் உபயோகிக்கக்கூடிய வசதியையும் இதுகொண்டுள்ளது.

2 மெகாபிக்ஸல் கெமரா, 16 ஜி.பி வரை அதிகரிக்கக்கூடிய மெமரி என்பன கூடுதல் வசதிகளாகும்.

4 சிம் வசதி கொண்ட கைத்தொலைபேசி




ஒடெக் (Otech) எனும் நிறுவனம் 4 சிம் வசதிகளைக் கொண்ட கைத்தொலைபேசி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இக்கைத்தொலைபேசியானது தொடுதிரை, 3G வசதி மற்றும் 12.1 மெகாபிக்ஸல் கெமரா வசதி ஆகியவற்றைக்கொண்டுள்ளது.

Wednesday, November 3, 2010

விற்பனைக்கு வருகிறது கூகுளின் 'குரோம் நெட்புக்'

கூகுள் நிறுவனம் தனது குரோம் இயங்குதளத்தை ( Chrome Operating System ) கொண்டியங்கும் நெட்புக் கணனிகள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வருமென தெரிவிக்கப்படுகின்றது.






கடந்த நவம்பர் மாதம் கூகுள் தனது குரோம் இயக்குதளத்தை ( Chrome OS ) அறிமுகம் செய்திருந்தது.



தற்போது 'இன்வென்டெக் ' எனப்படும் தாய்வான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்தே இதனை உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏஸர் மற்றும் ஹெவ்லட் பெக்கார்ட் நிறுவங்கள் கூகுளின் இவ்வியங்குதளத்தினை கொண்டியங்கும் கணனிகளை உருவாக்கிவருவதுடன் அவை இவ்வருட இறுதியில் சந்தைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கூகுள் தனது சொந்த தயாரிப்பான நெக்ஸஸ் (Nexus) எனும் 'ஸ்மார்ட்' போன்களை விற்பனை செய்திருந்தது. எனினும் இவை சந்தையில் வரவேற்பைப் பெறவில்லை.

இருந்தபோதிலும் கூகுள் தனது அடுத்தமுயற்சியில் இறங்கியுள்ளமை பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

அசுர வளர்ச்சியடைந்து வரும் குரோம் தடுமாறும் எக்ஸ்புளோரர்!

கூகுளின் குரோம் இயங்குதளமானது அசுரவேகத்தில் வளர்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இயங்குதளமானது தனது ஆதிக்கத்தினை தொடர்ந்து இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



தற்போது அதன் பாவனை வீதம் 50 % குறைவாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2003 ஆம் ஆண்டளவில் இது 83% இயங்குதள சந்தையை கொண்டிருந்தது.

ஃபயர்பொக்ஸ் இயங்குதளம் ஏற்ற இறக்கங்கள் இன்றி தனது இடத்தினை தக்கவைத்துள்ளது.

2008 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கூகுள் குரோமானது இண்டர் நெட் எக்ஸ்புளோரரை வேகமாக முந்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இண்டர் நெட் எக்ஸ்புளோரர் தனது 9 ஆவது தொகுப்பினையே பெரிதும் நம்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குரோமின் வளர்ச்சியானது பயர்பொக்ஸினையும் பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சேவையேன்பதிற்கு அப்பால் இயங்குதளங்கள் பெரிய வர்த்தக நடவடிக்கையென்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி இயங்குதளத்தினை இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.

Download Chrome 6 here

Tuesday, November 2, 2010

கூகுளின் தானியங்கிக் கார் செயற்கை அறிவாண்மைப் புரட்சி

கூகுள் நிறுவனம் தானாக இயங்கக்கூடிய கார் ஒன்றினை பரிசோதித்து வருவாக அறிவித்துள்ளது.

சுயமாக காரினை செலுத்தும் இத்தொழில்நுட்பமானது செயற்கை அறிவாண்மை ( Artificial Intellligence) மென்பொருளின் மூலம் வாகனங்களைக் கட்டுப்படுத்தும் முறையாகும்.




காரின் மேற்பகுதியில் புனல் போன்ற சிலிண்டர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது காரின் கண்போன்று தொழிற்படுகின்றது.

இக்கார்கள் வீடியோக் கெமராக்கள், ராடார் சென்ஸர்கள், லேஸர் தொழில்நுட்பங்கள் மூலம் போக்குவரத்து நெரிசல் நிலைமைகளை அறிந்து கொள்கின்றன.

இச்செயற்கை அறிவாண்மை தொழில்நுட்பத்தின் மூலம் வீதிவிபத்துக்களைப் பாதியாக குறைக்க முடியுமென கூகுள் தெரிவிக்கின்றது.

கூகுள் இக்காரை பல்வேறு நகரங்களில் பல கிலோ மீட்டர்கள் செலுத்தி ஆய்வு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இக்கார்களுக்கு பல்வேறு அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Monday, November 1, 2010

வை-மெக்ஸ் மயப்படுத்தப்படும் தென்கொரியா

இண்டெல் மற்றும் கொரியா டெலிகொம் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தென் கொரியா முழுவதற்கும் வை-மெக்ஸ் எனப்படும் அதிவேக இணையச் சேவையை விரிவுபடுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

இதன் மூலமாக ஆசியாவின் முதல் வை-மெக்ஸ் நாடாக தென்கொரியாவை மாற்றவுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கென இண்டெல் நிறுவனம் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது.

வைமெக்ஸ் சேவைக்கு இணையான வைப்ரோ சேவையே கொரியாவில் வழங்கப்படவுள்ளது.

இச்சேவையின் மூலம் கொரியாவின் 85% இணையப் பாவனையாளர்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே இச்சேவை கொரியாவின் முக்கிய சில நகரங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது
Related Posts Plugin for WordPress, Blogger...