Saturday, February 13, 2010

உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறிய


நாம் நிறைய புகைப்படம் (photo) கணணியில் வைத்து இருப்போம் ஆனால் அதில் எத்தனை புகைப்படங்கள் (photos) உண்மையானவை என்று தெரியாது. இந்த புகைப்படங்கள் புகைப்படக்கருவி (camera) மூலம் எடுத்ததா அல்லது Adobe photo-shop  மூலம் அல்லது வேறு எடிட்டிங் software மூலம்  எடிட் செய்து உருவாக்கப்பட்டதா எந்த புகைப்படக்கருவி (camera) மூலம் எடுக்கப்பட்டது அதை எவ்வாறு கண்டுபிடிப்பது.....?????????? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்

இதற்கான மென்பொருள் உங்களிடமே உள்ளது. ஆனால் இந்த மென்பொருளில் இந்த வசதி இருப்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்..பிரபல கூகிள் நிறுவனத்தின் picasa என்ற மென்பொருளில் தான் இந்த வசதி உள்ளது. 

இந்த மென்பொருளின் உதவியுடன் உங்கள் புகைப்படம் எந்த வகை கேமராவில் எடுக்கப்பட்டது, கேமரா model , புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி,நேரம் மற்றும் flash பயன்படுத்தி எடுக்கப்பட்டதா போன்ற தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.....
picasa மென்பொருளை open செய்து முறையே file -> add file to picasa என்பதை select செய்வதன் மூலம் உங்கள் புகைப்படத்தை open செய்யவும். அதன் பின்னர் அந்த புகைப்படத்தின் மீது right click செய்து properties ஐ select செய்தவுடன் அனைத்து தகவல்களும் கிடைக்கும்....
உங்களுக்காக picasa என்ற மென்பொருள் pendrive இல் வைத்து இயக்ககூடியதாக மாற்றப்பட்டு தரப்படுகிறது.

இதை நீங்கள் உங்கள் pendrive இல் எடுத்து சென்று எந்த கம்ப்யூட்டர் இலும் இணைத்து உங்கள் pendrive இல் வைத்தே இயக்கலாம்.

மென்பொருளைத் தரவிறக்க இங்கே அழுத்தவும்

1 comment:

  1. நண்பா ஒரு படத்தை அனுப்புகிறன் பாட்டோசோப் விளையாட்டா என பார்த்து சொல்லு...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...