Friday, September 24, 2010

அதிநவீன கணினி வைரஸ் "ஸ்டக்ஸ்னெட்' வைரஸ்"

உலகின் முதலாவது அதி மேம்பட்ட இணைய ஆயுதம் ஈரானின் அணுச் சக்தி நிலையங்களைத் தாக்க வடிவமைக்கப்பட்டிருக்கலாமென நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.



கணினி வைரஸான ' ஸ்டக்ஸ்னெட்' இதுவரை உலகில் உருவாக்கப்பட்ட மிகவும் அதிநவீன தீங்கு நிரலாக (மெல்வெயார்) கருதப்படுகின்றது.

உலகம் முழுவதும் சுமார் 45,000 வலையமைப்புக்களை மேற்படி தீங்கு நிரல் தாக்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் ' ஸ்டக்ஸ்னெட்' வைரஸ் கண்டறியப்பட்டது.

எனினும் நாடொன்றின் உட்கட்டமைப்பு வசதிகளைத் தாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வைரஸ் ஒன்று இனங்காணப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாகும்.

' ஸ்டக்ஸ்னெட்' வைரஸானது கணினிகளின் மென்பொருளை மீள் ப்ரோகிராம் செய்யக்கூடியது. மேலும் வேறுபட்ட பல கட்டளைகளைச் செயற்படுத்துமாறு கணினிகளைப் பணிக்கக்கூடியது.

மேற்படி வைரஸானது யு.எஸ்.பி. பென் ட்ரைவர்களினூடாகக் கணினிகளுக்கிடையில் பரிமாற்றப்படக்கூடியது. இதனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக இணையப் பாவனையைக் கட்டுப்படுத்தியுள்ள கணினிகள் கூட ' ஸ்டக்ஸ்னெட்' இற்கு இலக்காகும் சாத்தியமுள்ளன.

இவ்வைரஸ் அதிகமாக சிமென்ஸ் நிறுவனத்தின் மென்பொருட்களையே தேடுகின்றது. பிறகு அதனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றது. இந்த வைரஸானது ஏற்கனவே தனது நாசகார வேலையைத் தொடங்கிவிட்டது.

ஆனால் தற்போதுதான் தங்களுக்கு இது தெரியவந்திருக்கின்றது என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...