Monday, January 10, 2011

பற்களின் இடையே உளவு பார்க்கும் சிறிய இரகசிய கருவியுடன் அமெரிக்க பெண் ஈரானில் கைது

உளவு பார்க்கும் சிறிய இரகசிய கருவி ஒன்றினை பற்களின் இடையே பொருத்தியவாறு ஈரானுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற அமெரிக்க பெண் ஒருவரை அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டின் அரச நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.





55 வயதான இப்பெண் விஸா இன்றியே ஆர்மேனிய எல்லையினூடாக ஈரானுக்குள் பிரவேசிக்க முயன்றுள்ளார்.

இதன் போது ஈரானின் தென்மேற்கு நகரான நோர்டவுஸில் வைத்து இவரை எல்லையோர பாதுகாப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இவர் தற்போது எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பில் எதுவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...