Sunday, August 22, 2010

'கூகுள் மீ' : கூகுள் இணையத்தளத்தின் இரகசிய உருவாக்கம்

உலகில் பிரபல்யமான தேடு இணையத்தளமான கூகுள் இணையத்தளம், 'கூகுள் மீ' (Google Me) என்ற சமூக இணையத்தளம் ஒன்றை இரகசியமாக உருவாக்கி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.




சமூக இணையத்தள கண்டுபிடிப்புக்களில் பிரபலம்பெற்ற எடம் டி ஏஞ்சலோ (Adam D'Angelo) கருத்து தெரிவிக்கையில், நம்ப தகுந்த வட்டாரங்களில் கிடைக்கப் பெற்ற உண்மையான தகவல் இது எனத் தெரிவித்துள்ளார்..

டுவீட்டர் இணையத்தளத்தைப் போன்று 'கூகுள் பஸ்' (Google Buzz) என்ற இணையத்தளம் முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த கூகுள் பஸ் (Google Buzz) ஊடாக ஜீமெயில் மின்னஞ்சலை பாவிக்கும் ஒருவர், தனக்கு தேவையான புகைப்படங்கள், ஒளிப்பதிவுகள் போன்றவற்றை இதன் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும்..

கூகுள் நிறுவனமானது ஏற்கனவே ஒர்கியூட் ( Orkut) என்ற சமூக இணையத்தளத்தையும் உருவாக்கி இருந்தது. இது 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த ஒர்கியூட் ( Orkut) இணையத்தளம் இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகளில் பிரபல்யம் பெற்றது. ஆனால் இது ஒரு சாதாரண காரியமல்ல எனவும் இது ஒரு சவால்மிக்க பீடம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. _

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...