Wednesday, August 25, 2010

கிழிப்பர் ஜேக் ( Jack the Ripper ) மர்ம கொலைகள்

கிழிப்பர் ஜேக் (ஆங்கிலம்: Jack the Ripper) 1888 இல், கிழக்கு லண்டனில் ஒயிட்சேபல் வட்டத்தில் பல கோரமான கொலைகளை செய்த மர்ம நபருக்கு வழங்கப்படும் பெயராகும். கொலையுண்டவர்கள் விபசாரிகள். பல வருடங்களாக மிக தீவிர போலீஸ் துப்பு தேடியும், கொலைகாரன் யார் எனக் கண்டு பிடிக்கவில்லை. அதனால் இன்றுவரை, புத்தகம், சினிமா, தொலைகாட்சி மூலமாக யார் அவர் என பல வதந்திகள் பரவி வருகின்றன. 'கிழிப்பர் இயல்' என விளையாட்டாக புது வகையே ஆரம்பித்தது. 








பலியானவர்கள்

  1. மேரி ஆன் நிகல்ஸ் வயது:43 கொலை 31-8-1888
  2. அன்னீ சேப்மன் வயது:47 கொலை 8-9-1888
  3. எலிசபெத் ஸ்ட்ரைட் வயது:45 கொலை 30-9-1888
  4. காதரின் எட்டோஸ் வயது:46 கொலை 30-9-1888
  5. மேரி ஜேன் கெல்லி வயது:25 கொலை 9-11-1888
பலியானவர்கர்களை கொலைகாரர் மூர்க்கத்தனமாகி தாக்கி, 20-30 முறை கத்தியினால் குத்தி, உள்ளுறுப்புகளையும் வெளியேற்றிவிட்டார். கிழிக்கும் ஜேக் விவகாரத்தில், உள்ளுறுப்புகளை எடுத்துக் கொண்டு செல்வதும், முகத்தினை பல முறை கத்தியினால் குத்துவதும், 'கை எழுத்து' போல் ஆகிவிட்டது.
அந்த ஆண்டுகளில் மற்றும் 30-40 பெண் கொலை வழக்குகள் கொலைகாரர் அடையாளம் அடையாமல் உள்ளன. அவற்றின் பலவற்றை கிழிக்கும் ஜேக் செய்திருக்கலாம் என ஒரு சாரார் சொல்கிறனர்.



புலனாய்வு

இந்த 100 வருடங்களுக்கு மேல், புலனாய்வு முறைகள் அதிவேகமாய் வளர்ந்துவிட்டன. அக்காலத்தில், கிழிப்பர் போல தொடர்பு கொலையாளி என கருத்து இல்லை. அக்காலத்தில் சாட்சிகளை பேச வைப்பது, சாட்சிகள் கொடுக்கும் தகவலிலிருந்து கொலையாளி ஓரளவு எப்படியிருப்பர் என படம் வரைந்து மேலும் துப்பு தேடுவது , டி.என்.ஏ. அடையாளம் காட்டுவது போன்ற கலைகள் தெரிவில்லை. இந்த கொலைகள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆயிரக்கணக்கான கடுதாசிகள் காவற்துறைத் துப்பு குழுவிற்க்கு வந்தன. அதில் பெரும்பகுதி கிழிப்பரை எப்படி பிடிப்பது என காவற்துறைக்கு ஆலோசனைகள்.

சந்தேகமானவர்கள்

கிழிப்பர் கேசை புலனாய்வு செய்த காவற்துறையினரின் குறிப்பில் 6 பேர் மேல் சந்தேகம். இவர்கள் முக்கியமாக சிறிய குற்றங்களை செய்து, சிரையில் காலம் சடத்தினவர்கள். இதைத் தவிர இன்னும் 4 பேர் மேலும் ஐயமிருந்தது. பிற்காலத்து எழுத்தாளர்கள் இன்னும் 19 பேரை சந்தேகிக்கிறனர். அப்படி பட்டவர்களில் முக்கியமானர்கள் இங்கிலாந்து அரச குடும்பத்தை சார்ந்த ஆல்பெர்ட் விக்டர், விக்டோ ரியா அரசியின் மருத்துவர் டாக்டர் ஜான் வில்லியம்ஸ், முதல் சொன்ன ஆல்பெர்ட் விக்டரின் ஆசிரியர் ஜேம்ஸ் ஸ்டீவன். சமகாலத்திலேயோ, பிற்போதோ, சந்தேகங்களை தாண்டி, ஒன்றும் நிரூபிக்க படவில்லை.
பின்னோக்கம்: கொலைகள் நடந்து சுமார் 120 வருடம் ஆகியும் பொதுசன இலக்கியத்திலும், சினிமா, தொலைகாட்சியிலும் மக்கள் கிழிப்பர் ஜேக் பற்றி சுவாரசியம் காட்டுகிறனர். கிழிப்பர் ஜேக் 2006ல் நடந்த பி.பி.சி.யின். 'எல்லோரையும் விட மோசமான பிரிட்டிஷ்காரர் யார்' என்ற வாக்கெடுப்பில் முதலாக வந்தார்.

நன்றி wikipedia  

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...