Friday, July 16, 2010

கணணியால் மனிதன் உருவான அதிசயம்!

உங்களின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்வான் ஆனால் அவனை கிண்டல் செய்தால் உங்களை திட்டி விட்டுப் போய் விடுவான் இந்த மிலோ. யார் இந்த மிலோ? மிலோ நான்கு வயது சிறுவன்.














நிஜ நான்கு வயது சிறுவனுக்கும் இவனுக்கும் உள்ள வித்தியாசம் இவன் கணினியில் எழுதப்பட்ட ப்ரோக்ராம் என்பது மட்டுமே. உலகிலேயே முதன்முறையாக மனிதனாக தாராளமாக ஏற்றுக் கொள்ள முடியும் அளவிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள கற்பனை கதாபாத்திரம்.

இவனுடன் விளையாடுபவர்களின் உடலசைவுகள் அகச்சிவப்பு உணர்விக்களால் உள் வாங்கப்பட்டு பின்னர் செயற்கை மதிநுட்பம் மூலமாக மிலோ புரிந்து கொள்ளும் வகையில் மாற்றப்படுகிறது, இதே செயல்பாடு மிலோ பதிலளிக்கும் போது தலைகீழாக நடக்கும் வகையில் கணினி ப்ரோக்ராம் மூலம் வடிவமைத்துள்ளது மைக்ரோசாப்ட். இதை மைக்ரோசாப்ட் சோதித்துக் காட்டிய போது இது ஒரு கணினி ப்ரோக்ராம் என யாராலும் நம்ப முடியவில்லை.

Click to open image! 

    Click to open image! 


    அப்படியே நிஜமான 4 வயது சிறுவன் செயல்படுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது மிலோவின் செயல்பாடு. ஜாய் ஸ்டிக் பயன்படுத்தியே கணினியில் விளையாடி வந்தவர்களுக்கு அறிவியல் புனை கற்பனை கதாபாத்திரத்துடன் விளையாட வழி வகுத்துக் கொடுத்துள்ளது இந்த கண்டுபிடிப்பு என்று கூறலாம்.



    சோதனையின் ஒரு கட்டமாக ஒருவர் பிஸ்கட்டுகளை தூக்கி வீசிய போது மிலோ கிழே குனிந்து அதை பிடிக்க முற்பட்டதும் , உன்னுடைய பாடசாலை ப்ரோஜெக்ட்களை முடித்து விட்டாயா என கேட்ட போது முடிக்காததற்கு அடையாளமாக தலையை குனிந்து கொண்டு அப்படியே நான்கு வயது சிறுவன் போல் செயல்பட்டதும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    இது மட்டுமல்லாமல் கதை கேட்பவர்களுக்கு தன்னுடைய குடும்பம் லண்டனில் இருந்து நியூசிலாந்து வந்து விட்டதாகவும், நியூசிலாந்து வந்த பின்னர் தன பெற்றோர்கள் மிகவும் பிஸியாக இருப்பதால் தான் நினைப்பதை அவர்களிடம் கூற முடியவில்லை எனவும் சோகமாக 4 வயது சிறுவன் தன கதையை சொல்வது போல் சொல்கிறான் இந்த மிலோ. மிலோவை பார்த்து விட்டு வரும் அனைவருக்கும் தத்ரூபமாக அவரவர் வீட்டுப் பிள்ளை போல் நெஞ்சில் நிறைந்து விடுகிறான் மிலோ.

    No comments:

    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...