Tuesday, July 6, 2010

On-Screen Key Board மூலம் தட்டச்சு செய்வது எவ்வாறு

நாம் தட்டச்சு செய்யும் சமயம் கீ-போர்ட் நமது கம்யூட்டரின் ஸ்கிரீனில் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுவோம். குறிப்பாக புதிதாக தட்டச்சு செய்பவர்களும்- தமிழில் முதன்முதலில் தட்டச்சு செய்பவரகளுக்கும் இதை யோசிப்பார்கள். இந்த வசதியை பெற நான் எந்த சாப்ட் வேரையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். 



நமது கணிணியிலேயே அந்த வசதி உள்ளது. அதை எப்படி பெறுவது என் பார்ப்போம்.முதலில் நீங்கள் தட்டச்சு செய்ய வேண்டிய வேர்ட்,நோட்பேட், வோர்ட் பேட் எதுவானாலும் திறந்துகொள்ளுங்கள். அடுத்து Start-Programs-Accessories-Accesability-On Screen Keyboard(இது நான்காவது வரியில் இருக்கும்) வரிசையாக தேர்ந்தேடுக்கவும்.அதில் உள்ள On-Screen Keyboard -ஐ கிளிக் செய்யவும்.


இப்போது உங்களுக்கு இந்த கீ-போர்ட் உங்கள் கம்யூட்டர் ஸ்கீரினில் வந்து அமர்ந்து கொள்ளும். இதில் நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய விரும்பினால் இதில் உள்ள Settings கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்டவாறு சாரளம் விரியும்.



அதில் நீங்கள் Font -ஐ தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



உங்களுக்கு பிடித்த ஆங்கில பாண்ட் வகையைதேர்வு செய்துக்கொள்ளுங்கள். அதுபோல் எழுத்துரு அளவையும் தேர்வு செய்துக்கொள்ளுங்கள். நீங்கள் தேர்வு செய்ததும் உங்களுடைய கணிணி திரையில் உள்ள On-Screen KeyBoard ஆனது நீங்கள் தேர்வுசெய்ததற்கு ஏற்ப மாறிவிடும்.


இதில் நீங்கள் இரண்டு வகைகளில் தட்டச்சு செய்யலாம்.முதல்வகையானது நீங்கள் கணிணிக்கு புதியவராக இருந்தால் உங்களுடைய மவுஸ் கர்சரை on screen Keyboard -ல் நீங்கள் தட்டச்சு செய்ய வேண்டிய எழுத்தின் மீது வைத்து நேரடியாக கிளிக் செய்தால் எழுத்தானது கணிணிதிரையில் பதிவாகும். அடுத்த வழிமுறை யானது நீங்கள் உங்கள் கைகளை கீ-போர்டில் அதற்குரிய போசிசனில் வைத்துக்கொண்டு திரையில் உள்ள எழுத்தைபார்த்து டைப் அடிப்பது. நான் மேற்கண்ட படத்தில் Hello என டைப் அடித்து உள்ளதை பாருங்கள்.


பகுதி இரண்டு தமிழ் இல் டைப் செய்வது பற்றி விரைவில்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...