Saturday, July 17, 2010

Internet Hints இணைய தகவல்கள்

இன்டர்நெட் பற்றி நமக்கு தெரியும். ஆனால் அதில் உபயோபடுத்தப்படும் சிறு -சிறுவார்த்தைகளுக்கு விளக்கங்கள் நமக்குதெரிவதில்லை. இன்டர்நெட் பற்றி அனைத்தும் தெரிந்தவர்களுக்கும் இதில் உள்ள விளக்கங்கள் உதவும் என நினைக்கின்றேன். அதுபோல் புதியவர்களுக்கும்- நேர்முகத்தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கும் இந்த குறிப்புகள் உதவும் என எண்ணுகின்றேன்.








Access:-மைக்ரோசாப்ட் வழங்கும் சேவை

Access Provider:-இணைய சேவையை உங்களுக்குஅளிக்கும் நிறுவனம்.

Internet Service Provider-ISPஎன அழைக்கப்படுகிறது.

ADDRESS:-முகவரி-இதைக்கொண்டுதான் இணைய முகவரிகள் அறியப்படுகின்றது.

ADSL:Asymmetric Digital Subscriber Line- தொலைபேசி கம்பிகள் வழியாக 7 மில்லியன் bps வேகத்தில் தகவல்களைஅனுப்ப உதவும் தொழில்நுட்பம்.

Alta Vista:- இணையத்திலுள்ள பல்வேறு தலங்களை த் தேடிக் கொடுக்கும் தளம்.

AQL:-America Online:-இன்டர்நெட் சேவை பெற உதவும் ஆன்லைன் சேவை.

Anonymous FTP:- வேறு ஒரு கணிணியில் உள்ள தகவல்களை பிரதி எடுத்துக்கொள்ளும்முறை.

Applet:- ஜாவா கம்யூட்டர் திட்ட மொழியில் எழுதப்பட்ட ஆணை.இவற்றை வெப் பிரவுசர்மூலம் இறக்கிக் கொள்ளலாம்.

Archie:- இணையத்தில் கோப்புகளை தேடும் வழி.

Archive:- பல கோப்புளை ஒன்றாக அழுத்தித்தொகுத்து வைக்கும் முறை.
ARPANET:- அமெரிக்க அரசின் பயன்படுத்தப் படும் வலை தொகுப்பு.

Attachment:- ஈ -மெயிலில் அனுப்பப்படும் கம்யூட்டர் கோப்பு.

Backbone:- இன்டரநெட் சேவையை கொடுக்கும்அமைப்புக்களையும் பெரிய இணையத் தளங்களையும் இணைக்கும் அதிவேக தகவல் தொடரபு இணைபபு.

Baud:- ஒரு வினாடி நேரத்தில் ஒரு மோடம் தொலைபேசி இணைப்பின் வழியாக அனுப்பி வைக்கும் மின் குறியிடுகள் bits /second என்னும் அளவு.

BCC-Blind Carbon Copy:- BCC முகவரிகள் உங்களுடைய மின்னஞ்சல் தகவல்களை மற்றி முகவரியாளர்களுக்கு தெரியாவாறு நகலெடுக்கும்.

Binary File:- படங்கள், இசை, ஆவணங்கள் என அனைத்தும் கொண்ட ஒரு தொகுப்பு.

Bin Hex:- மெகின்டோஷ் கணிணி உபயோகிப்பவரகளுக்கு பழக்கமான ஒன்று. கோப்புகளை குறீயீட்டு முறையில் அடையாளம் காண உதவுவது.

Bit:- கணிணி துறையில் பயன்படும் மிகச்சிறிய அலகு.

Bitmap:- பெயிண்டில் உபயோகிக்க படுவது. சின்ன சின்ன புள்ளிகளை கொண்டு பெயிண்டில் உருவாக்கப்படும் படம்.

Bitnet:- அதிக எண்ணிக்கையில் கணிணியை இணைத்த வலைத்தொகுப்பு.

Bookmark:- இணையத்தில் உலா வருகையில் பிடித்த பக்கங்களை நாம் ப்ரவுஸரில் குறித்து வைத்துக்கொள்ள பயன்படுவது.

Bounce:- இது கிரிக்கெட்டில் வரும் பவுன்ஸ் அல்ல. தவறான முகவரியில் நாம் அனுப்பிய இ-மெயில் நமக்கே திரும்பிவருவது.

bps:- bits/second -இணையத்தில் தகவல்கள் அனுப்பும் வேகத்தை குறிப்பது.

Browser:-www பக்கத்தில் உள்ள தகவல்களை படிக்க அதவும் கணிணியின் ஆணைத்திட்டம்

Byte:- கணிணியின் நினைவை இந்த அலகால் குறிப்பிடுவார்கள்.

cc-carbon copy:- ஒரு இ-மெயிலின் நகலை வேறு முகவரியாளர்களுக்கும் அனுப்பவதை குறிப்பிடுவது.

CCITT: ITU-T என்பதை குறிக்கும். உலகத்தில் உள்ள தகவல் தொடர்புகளை நிர்வாகிக்கும் அமைப்பு.

Channel:- இணையத்தில் அரட்டை அடிக்கும் குழுவின் தனி அடையாளம்.

Chanop-Channal Operator என்பதனை குறிப்பிடுவது. வெளியாட்கள் அரட்டையில் பங்கேற்க விடாமல்வெளியேற்றுபவர்.

Chat:- முன்-பின் அறிந்திடாதவர்களை இணையம்மூலம் அரட்டை அடிக்க உதவுவது.

Client:-பிற கணிணியை பயன்படுத்திக் கொள்ளும்கணிணியின் சேவை.

Client/Server Model:- கணிணிகள் தங்களுக்குள்உள்ள வேலைகளை பங்கிட்டுக்கொள்ளும் வழி.

Com:- இணைய முகவரியின் இறுதியில் குறிப்பிடப்படும் சொல். இது Host என்கின்ற கணிணியின் வர்த்தக நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.

Communication Program:- உங்கள் கணிணியில்உள்ள ப்ரோகிராம் மூலம் பிற கணிணியுடன் தொடர்பு கொள்ளுதல்.

Compuserve-CIS:- இணைய சேவைகளை ஆன்-லைனில் அமைக்கும் அமைப்பு. தொழில்துறையினர் கலந்துரையாடும்தளம்.

Cookies:- நீங்கள் கடந்த முறை ஒருகுறிப்பிட்ட தளத்தை பார்த்ததை நினைவூட்டக்கூடி கணிணியில் தோன்றுவது.

Country Code:- இணைய முகவரியில்கடைசியாக அமைந்துள்ள நாட்டை குறிப்பிடும் சொல். இரண்டு எழுத்துக்களை மட்டும் பயன்படுத்துவார்கள். உதாரணத்திற்கு @yahoo.co.uk.

cyber Space - Cybercop- கணிணியில் உருவாக்கபடும் கற்பனை உலகம்.

cyber crime:- கணிணி தொடர்பான 
குற்றங்களை குறிக்கும் சொல்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...